நீதிபதிகளையும், நீதித்துறையையும் மிரட்டுறாங்க!! இதை விட பெரிய அச்சுறுத்தல் கிடையாது! அண்ணாமலை ஆவேசம்!
அரசியலமைப்பு உரிமைகள் பற்றிய அனைத்து உரத்த பேச்சுகளும், இண்டி கூட்டணியினருக்கு வெறும் சொல்லாட்சி மட்டுமே. அவர்கள் அரசியலமைப்பிற்கு அச்சுறுத்தல் விடுக்கின்றனர் என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை: திமுக மற்றும் இண்டி கூட்டணி நீதிபதிகளையும் நீதித்துறையையும் மிரட்டுவதற்கு தகுதி நீக்க நடவடிக்கையை கருவியாக பயன்படுத்துகிறார்கள் என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே.அண்ணாமலை கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அரசியலமைப்பு உரிமைகள் பற்றிய அவர்களின் உரத்த பேச்சுகள் வெறும் சொல்லாட்சி மட்டுமே என்று அவர் விமர்சித்தார்.
அண்ணாமலையின் அறிக்கையில், “நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றம் சென்றுள்ள நிலையில், தகுதி நீக்க நோட்டீஸ் எதற்கு? சிறுபான்மையினரை திருப்திப்படுத்தும் அரசியல்தான் அவர்களுக்கு முதன்மை. அரசியலமைப்புக்கு இதைவிடப் பெரிய அச்சுறுத்தல் என்ன இருக்க முடியும்?” என்று கேள்வி எழுப்பினார்.
திமுகவும் இண்டி கூட்டணியும் மீண்டும் ஒருமுறை தங்களுக்கு பிரிவினைவாத அரசியல்தான் முதலிடம் என்று நிரூபித்துள்ளார்கள் என்று அண்ணாமலை காட்டமாகக் கூறினார். எந்த நீதிபதியின் தீர்ப்பும் இவர்களுக்கு பிடிக்கவில்லை என்றால், பதவி நீக்க நடவடிக்கையை அச்சுறுத்தலாக பயன்படுத்துவார்கள் என்று மக்களுக்கு சொல்கிறார்களா என்று அவர் சாடினார்.
இதையும் படிங்க: ரூ.1,720 கோடி முதலீடு! 20,000 பேருக்கு வேலை!! அத்தனையும் போச்சு! முதல்வர் ஸ்டாலினை வெளுத்து வாங்கும் அண்ணாமலை!
இந்த குற்றச்சாட்டு, தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீதிபதி சுவாமிநாதன் திருப்பரங்குன்றம் தீபம் வழக்கில் கொடுத்த தீர்ப்புக்கு எதிராக திமுக தலைமையிலான இண்டி கூட்டணி எம்பிக்கள் தகுதி நீக்க நோட்டீஸ் கொடுத்துள்ள நிலையில், அண்ணாமலை இதை சிறுபான்மை ஓட்டு அரசியலாக சித்தரித்துள்ளார்.
திமுகவும் இண்டி கூட்டணியும் அரசியலமைப்பைப் பாதுகாப்பதாக சொல்லிக்கொண்டு, உண்மையில் அதற்கு அச்சுறுத்தலாக செயல்படுகிறார்கள் என்று அண்ணாமலை குற்றம் சாட்டியது, சமூக வலைதளங்களில் விவாதத்தைத் தூண்டியுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன் இந்தப் போராட்டம் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: நேற்று மோடி! இன்று அமித் ஷா! வந்தே மாதரம் 150 விவாதம்! காங்கிரசை வச்சு செய்யும் பாஜக!