"திமுகவின் மக்கள் விரோத போக்கே எங்கள் வெற்றிக்கு வழி" - ஜி.கே.வாசன் அதிரடி பேட்டி!
திமுகவின் மக்கள் விரோதப் போக்கால் எங்கள் வெற்றி உறுதி என்று சென்னை விமான நிலையத்தில் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தொகுதிப் பங்கீடு மற்றும் கூட்டணி நிலைப்பாடுகள் குறித்துத் தமிழ் மாநில காங்கிரஸ் (தமாகா) தலைவர் ஜி.கே. வாசன் இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
திமுக அரசின் மக்கள் விரோதப் போக்கு, மக்களிடையே பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது எதிர்மறையான வாக்குகளை அதிகரித்து வருகிறது. மக்களின் இந்த மனநிலை அதிமுக தலைமையிலான கூட்டணியின் வெற்றியை உறுதி செய்யும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
தற்போது தொலைக்காட்சிகளில் வெளியாகும் தொகுதிப் பங்கீடு குறித்த செய்திகள் அனைத்தும் தவறானவை என்றும், கூட்டணியைப் பலவீனப்படுத்த விரும்புவோர் பரப்பும் தகவல் இது என்றும் அவர் சாடினார். அதிமுகவுடன் அதிகாரப்பூர்வமாகப் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, எத்தனை தொகுதிகள் என்பது குறித்து முறையாக அறிவிக்கப்படும் எனத் தெளிவுபடுத்தினார்.
இதையும் படிங்க: கொளுத்தி போட்டு குளிர் காயாதீங்க..! காங்கிரஸ் குறித்த வதந்திகளுக்கு செல்வப்பெருந்தகை காட்டம்..!!
தொகுதிப் பங்கீட்டில் தங்களது பலத்தை மட்டும் பார்க்காமல், கூட்டணியில் உள்ள பெரிய கட்சிகளின் (அதிமுக, பாஜக) வெற்றி வாய்ப்பையும் கருத்தில் கொண்டு சுமுகமான முறையில் இடங்கள் ஒதுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கூறியதுதான் உண்மை; அவர்களுடன் நாங்கள் எந்தவிதக் கூட்டணிப் பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என்று கூறி, தவெக - தமாகா கூட்டணி குறித்த வதந்திகளுக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்தார்.
ஏற்கனவே அதிமுக மற்றும் பாஜகவுடன் தமாகா 12 தொகுதிகள் வரை கேட்டு வருவதாகத் தகவல்கள் கசிந்துள்ள நிலையில், ஜி.கே.வாசனின் இந்த விளக்கம் தொகுதிப் பங்கீடு இன்னும் இறுதி கட்டத்தை எட்டவில்லை என்பதை உறுதிப்படுத்துகிறது.
இதையும் படிங்க: சட்டப்போர் பலப்படும்! முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த மாற்றுக்கட்சி வழக்கறிஞர்கள்!