ஏணியும், சிறுத்தையும் விசிலுக்கு முட்டுக் கொடுக்குது...! ஆ.ராசா விமர்சனம்..!
விசிக, Iuml கட்சிகள் அமைச்சரவையில் இடம்பெறுவதை ஆ. ராசா விமர்சனம் செய்துள்ளார்.
தமிழ்நாட்டின் 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழக தலைவர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான கட்சி பெரும்பான்மைக்கு சற்று குறைவான இடங்களைப் பெற்ற நிலையில், புதிய கூட்டணி அரசியல் உருவெடுத்தது. இந்தச் சூழலில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவை தவெக அமைச்சரவையில் இணைவது தமிழ்நாட்டு அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இது திமுக தலைமையிலான முற்போக்கு கூட்டணியின் உடைவுக்கு வழிவகுத்த ஒரு வரலாற்று நிகழ்வாகக் கருதப்படுகிறது.
2026 தேர்தலுக்குப் பிறகு, தவெக 108 இடங்களை வென்று மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்தது. ஆனால் முழு பெரும்பான்மைக்கு சில இடங்கள் குறைவாக இருந்த நிலையில், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவை நாடியது. விசிக மற்றும் IUML ஆகியவை முதலில் திமுக கூட்டணியின் பகுதியாக இருந்தபோதும், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தவெகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவை அளித்தன. இந்த ஆதரவு தவெக அரசை உறுதிப்படுத்த உதவியது.
தவெக அமைச்சரவை விரிவாக்கத்தில் இந்த இரு கட்சிகளும் இணைவது குறித்த விவாதங்கள் தீவிரமடைந்தன. தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் விசிக மற்றும் IUML-க்கு அமைச்சர் பதவி அளிக்க திறந்த மனதுடன் அழைப்பு விடுத்தனர். இது சமூக நீதி மற்றும் மதச்சார்பின்மை அடிப்படையிலான உள்ளடக்கிய அரசை உருவாக்கும் நோக்கத்துடன் செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது. IUML தரப்பில் பாபநாசம் தொகுதி எம்.எல்.ஏ. ஏ.எம். ஷாஜகான் அமைச்சராக பரிந்துரைக்கப்பட்டார்.
இதையும் படிங்க: தவெக அமைச்சரவை விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து 3-வதாக பாடப்பட்டதற்கு எம்பி கனிமொழி கண்டனம்!
விசிக தரப்பில் திண்டிவனம் தொகுதி எம்.எல்.ஏ. வண்ணி அரசு பரிந்துரைக்கப்பட்டார். இருவரும் இன்று பதவியேற்கின்றனர். இதனை ஆ.ராசா விமர்சனம் செய்து உள்ளார். அவரது பதிவில், முன் ‘ஏற’ தரப்பட்ட ‘ஏணியும்’, மூட சாதியை நொறுக்க வேண்டிய ‘சிறுத்தையும்’... வெறும் ‘விசில்’ சத்தத்திற்கு முட்டுக் கொடுக்குமென்றால் பூ முடித்தவனை புறந்தள்ளி புணர்ச்சிக்கு வேறிடம் தேடுவதில் தவறில்லை என்று தெரிவித்தார். பெரியாரின் ‘காலதேச வர்த்தமான’ த்திற்கு காத்திருப்போம் என்றும் களமாடுவோம் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: புதுசா வந்தவங்களுக்கு முன்னுரிமை.! அதிருப்தியில் திருப்பூர் திமுக மா. செ. செல்வராஜ் விலகல்..!