×
 

இளைஞர் ஓட ஓட வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம்.. திமுக கவுன்சிலர் கைது.. இதுதான் ஸ்டாலின் தந்த விடியலா? அதிமுக கடும் விமர்சனம்..!

அரக்கோணத்தில் இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் திமுக கவுன்சிலர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்ட சம்பவத்தை அதிமுக கடுமையாக விமர்சித்துள்ளது.

அரக்கோணத்தில் இளைஞரை வெட்டி கொலை செய்த வழக்கில் திமுக கவுன்சிலர் மற்றும் அவரது கணவர் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டனர். 

ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் அவினேஷ். 31 வயதாகும் இவர் கொலை வழக்கு ஒன்றில் கைதாகி ஜாமினில் வெளிவந்துள்ளார். நிபந்தனை ஜாமினில் வெளிவந்த அவினேஷ் ரத்தனகிரி காவல் நிலையத்தில் கையெழுத்து போடுவதற்காக சென்றுள்ளார்.

அப்போது காவல் நிலையம் அருகே சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து ரத்தனகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இதையும் படிங்க: அலங்கோல ஆட்சி! அலட்சியத்தில் மாநகராட்சி.. வரும் 22ல் அதிமுக ஆர்ப்பாட்டம்! எங்க தெரியுமா?

அதில், அம்மனுரைச் சேர்ந்த ஒன்றிய கவுன்சிலர் அஸ்வினியின் கணவர் சுதாகரின் இடது கையை கடந்த ஏப்ரல் மாதம் அபினேஷ் துண்டித்ததாகவும், இதற்குப் பழி தீர்க்கும் விதமாக அவரை கொலை செய்துள்ளதும் போலீசார் விசாரணையில் கூறப்பட்டது. 

இதனை அடுத்து ஒன்றிய கவுன்சிலர், அவரது கணவர் சுதாகர், ரீகன், ஆனந்த், சுரேஷ், வினித், ஜெயப்பிரகாஷ், சஞ்சய் உள்ளிட்ட ஒன்பது பேரை கைது செய்த போலீஸ் சிறையில் அடைத்தனர். 

இந்த சம்பவத்தை சுட்டிக்காட்டி அதிமுக கடுமையாக குற்றம் சாட்டியுள்ளது. அதிகரிக்கும் கொலைகளுக்கும், இப்படி சொந்த கட்சி கவுன்சிலர்களே கொலை வழக்கில் கைதாவதற்கும் என்ன விளக்கம் வைத்துள்ளார் பொம்மை முதல்வர் என்று கேள்வி எழுப்பியுள்ளது.

ஒவ்வொரு நாள் விடியலும் சட்டம் ஒழுங்கு சீர்கெட்ட செய்தியோடு விடிவது தான் ஸ்டாலின் தந்த விடியலா என்றும் அதிமுக சாடியுள்ளது.

மேலும் திமுகவினரிடம் இருந்தும் திமுக ஆட்சியில் இருந்தும் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்றும் தெரிவித்துள்ளது. 

இதையும் படிங்க: ஜெ. படத்துடன் பிரேமலதா... இதுக்கு தான் அப்படி போட்டேன்! L.K.சுதீஷ் விளக்கம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share