எந்த வாக்காளரையும் காரணம் இல்லாமல் நீக்க முடியாது... புரிஞ்சுக்கோங்க..! தமிழக தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்...!
காரணம் இல்லாமல் எந்த வாக்காளரையும் பட்டியலில் இருந்து நீக்க முடியாது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் விளக்கமளித்தார்.
தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் எஸ் ஐ ஆர் பணிகள் நடைபெறுகிறது. இந்த நிலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, எஸ் ஐ ஆர் பணிகள் குறித்து விளக்கம் அளித்தார். தமிழகத்தில் 6.41 கோடி வாக்காளர்களில் 6.16 கோடி வாக்காளர்களுக்கு எஸ் ஐ ஆர் படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.
எந்த விசாரணையும் இன்றி வாக்காளர் பட்டியலில் இருந்து யாரையும் நீக்க முடியாது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்தார். தமிழ்நாட்டில் எஸ் ஐ ஆர் பணிகளில் தேர்தல் ஆணையம் சார்பில் 83 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கூறினார். 68, 647 பிஎல்ஓ-க்கள் உள்ளிட்ட 2.45 லட்சம் நபர்கள் எஸ் ஐ ஆர் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிகப்படியாக பி எல் ஓ- க்கள் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். ஆன்லைன் மூலமாக 2 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாகவும் வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறாத நபர்கள் விண்ணப்பிக்க போதுமான அவகாசம் தரப்படும் என்றும் அர்ச்சனா பட்நாயக் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கிட்டத்தட்ட நெருங்கியாச்சு... SIR விண்ணப்ப படிவங்கள்... முக்கிய தகவல் கொடுத்த தேர்தல் ஆணையம்...!
எஸ் ஐ ஆர் படிவம் பூர்த்தி செய்து அளிப்பதற்கான காலக்கெடு டிசம்பர் நான்காம் தேதி என்றும் கால அவகாசம் நீட்டிக்க வாய்ப்பில்லை என்றும் தெரிவித்தார். சென்னையில் எஸ் ஐ ஆர் விண்ணப்பங்கள் 96% வழங்கப்பட்டு விட்டதாகவும் 50 சதவீதம் விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யப்பட்டு திருப்பி பெறப்பட்டுள்ளதாகவும் அர்ச்சனா பட்நாயக் கூறினார்.
இதையும் படிங்க: தேர்தல் ஆணையத்துக்கு பாடை... போராட்டத்தில் குதித்த புதுவை காங்கிரஸ் கட்சியினர்...!