ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டீங்க விஜய்... பகிரங்க எச்சரிக்கை விடுத்த அர்ஜுன் சம்பத்... அடுத்து நடக்கப்போவது இதுவா?
காங்கிரஸின் குறுக்கு நடவடிக்கைக்கு விஜய் பலியாகி விடக்கூடாது என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் எச்சரிக்கை
திமுகவினர் முதுகில் குத்தி விட்டு சென்றது போல் ஒரு நாள் விஜய் முதுகிலும் காங்கிரஸ் கட்சியினர் குத்தி விட்டு செல்வார்கள். நாடு முழுவதும் காங்கிரஸ் தோற்கடிக்கப்பட்டு வரும் நிலையில் அவர்களுடன் கூட்டணி வைத்திருப்பதால் விஜய் ஏமாற்றம் அடைவார் என விஜய்க்கு இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் அறிவுறுத்தியுள்ளார்.
இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் இந்து நாகர்கோவில் நாகராஜா கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறும் போது, காங்கிரஸ் கட்சியிடம் விஜய் ஏமாந்து விடக் கூடாது விஜய் அவசரப்பட்டு காங்கிரசை கூட்டணிக்கு அழைத்திருக்க கூடாது. அதிக இடங்களில் வெற்றி பெற்ற தனது கட்சிக்கு 5 தொகுதிகளில் வெற்றி பெற்ற காங்கிரஸ் வந்து ஒன்றும் ஆட்சி அமைக்க போவதில்லை.
ஆட்சி அமைக்கக்கூடிய பெரும்பான்மையான கட்சி அதிமுக அவர்களுடன் இணைந்து இருக்கலாம்.5 தொகுதிகளை பெற்ற காங்கிரஸ் ஒட்டுமொத்தமாக விஜயின் கட்சியை ஆக்கிரமித்து உள்ளது.காங்கிரஸ் கட்சி என்பது கொத்தடிமை கட்சி. தமிழக வெற்றி கழகத்தையும் இந்த கொத்தடிமையில் இணைக்க காங்கிரஸ் முயற்சிக்கிறது. இதில் விஜய் கவனமாக இருக்க வேண்டும்.
இதையும் படிங்க: ஆட்சியமைப்பாரா தளபதி..? மீண்டும் ஆளுநரை சந்திக்கும் விஜய்.! பெரும் எதிர்பார்ப்பு..!
விஜய் கட்சியில் அரசியல் அனுபவம் உள்ளவர்கள் இருக்கின்றனர் அவர்களிடம் ஆலோசனை செய்து முடிவெடுப்பதை விட்டுவிட்டு கவர்னர் மீது பழி சுமத்துவது பிற கட்சிகள் மீது பழி சுமத்துவது ஏற்புடையது அல்ல . காங்கிரஸிடம் விஜய் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் அந்த கட்சியால் தனக்கு எந்த பலனும் இல்லை என்பதை விஜய் உணர வேண்டும். நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி தோற்கடிக்கப்பட்டு வருகிறது.
காங்கிரஸ் கட்சி என்பது ஒரு மக்கள் விரோத கட்சி அதுவும் தமிழர் விரோத அமைப்பு அவர்களுடன் தமிழக வெற்றிக்கலகம் கூட்டணி வைத்திருப்பதால் விஜய் ஏமாற்றம் அடைவார். காங்கிரசின் குறுக்கு நடவடிக்கைகளுக்கு விஜய் பலியாகி விடக்கூடாது.
தமிழகத்தில் விஜய்யை வைத்து ஆட்சி அதிகாரத்தை பிடிப்பதில் குறியாக உள்ளனர் நாடு முழுவதும் செல்வாக்கை இழந்த தலைவராக ராகுல் காந்தி உள்ளார். காங்கிரஸ் ஆதரவு என்றைக்கும் விஜய்க்கு பாதிப்பு தான். திமுக முதுகில் எப்படி காங்கிரஸ் கட்சி குத்திவிட்டு வெளியேறியதோ அதேபோல் ஒருநாள் விஜய் முதுகிலும் காங்கிரஸ் கட்சி குத்திவிட்டு வெளியே செல்வார்கள்.
பாஜக அதிமுக கட்சியின் ஆதரவை பெற்று ஆட்சி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆளுநர் ஆட்சி அமைக்க அழைக்கவில்லை என பெரும்பான்மையை நிரூபிக்காமல் அவர் மீது பழி சுமத்துவது ஏற்புடையது அல்ல என பேசினார்.
இதையும் படிங்க: நொடிக்கு நொடி பரபரப்பு... நாடு அரசியலில் குழப்பம்... திமுக, அதிமுக, பாஜக, தவெக தனித்தனியாக அனல் பறக்கும் ஆலோசனை...!