சோம்பேறி, ஒழுக்கமில்லாதவர்... விஜயை சரமாரியாக சாடிய அர்ஜுன் சம்பத்...!
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் நடத்துவது அரசியல் கட்சி அல்ல, பக்குவமில்லாத ரசிகர் மன்றம். எனவே அவரது கட்சியினர் அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட்டை இழப்பார்கள்
ராசிபுரத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் பிரேம்குமாரை ஆதரித்து இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் பிரச்சாரம் மேற்கொண்டார். ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் பகுதியில் பரப்புரையில் ஈடுபட்டவர் தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்துப் பேசினார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அர்ஜுன் சம்பத் கூறுகையில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் ஒவ்வொரு முறை பிரச்சாரத்திற்கு வரும்போதும் அவருக்கான வாக்குகள் குறைந்து வருகிறது. கரூர் விவகாரம், விஜய் அவரது மனைவி குறித்து பொதுத்தளத்தில் பேசிய கருத்து ஆகியவை விஜயின் மீது ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூரில் விஜய் பிரச்சாரத்தை காண வந்த 9 பேர் மயக்கம் அடைந்தது, விஜய் வாகனத்தை பின்தொடர்ந்து செல்பவர்கள் விபத்தில் சிக்குவது ஆகியவற்றை பார்ப்பதற்கே மனதிற்கு சங்கடமாக இருக்கிறது. எனவே நடிகர் விஜயின் செல்வாக்கு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே இருக்கிறது.
இதையும் படிங்க: விஜய் பத்திரிகையாளர்களை சந்திக்காதது ஏன்?... செய்தியாளர் கேள்விக்கு யாருமே எதிர்பார்க்காத பதில் கொடுத்த செங்கோட்டையன்...!
அவர் கிறிஸ்தவர்கள் வாக்குகளை பெற்று முதலமைச்சர் ஆகிவிடலாம் என நினைக்கிறார். ஆனால் கிறிஸ்தவர்களிலேயே பெரும்பாலானவர்கள் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தை விரும்பவில்லை.
அதனால் அனைத்து இடங்களிலும் விஜய் கட்சியினர் டெபாசிட்டை இழப்பார்கள். விஜய் நடத்துவது அரசியல் கட்சி அல்ல, பக்குவம் இல்லாத ரசிகர் மன்றம். விஜய் ஒழுங்கீனமாக நடந்து கொள்கிறார். விஜய்க்கு போலீஸ் அனுமதி வழங்கியும் சோம்பேறித்தனம் காரணமாக பல இடங்களில் பிரச்சாரங்களை ரத்து செய்கிறார்கள்.
இதையும் படிங்க: இதுதான் நம்ம அஜெண்டா..! போலீஸ் மற்றும் அரசு ஊழியர்களுக்கான வாக்குறுதிகளை அறிவித்த விஜய்..!