மன்னிப்பு கேளுங்க மரிய வில்சன்... இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் ஆவேசம்...!
அமைச்சர் மரிய வில்சன் வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கோர வேண்டும்.
தமிழ் மொழி குறித்த விவாதத்தின் போது அமைச்சர் மரிய வில்சன் பேசியது தவறான முன்னுதாரணம். அந்த கருத்துக்களை அவைகுறிப்பில் இருந்து நீக்கி, அமைச்சர் மரிய வில்சன் வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கோர வேண்டும். மேகதாது அணை கட்ட ஒப்புதல் வழங்காமல் நிறுத்தி வைத்துள்ளதற்கு பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கருத்து
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த சிறுவாபுரியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து ஆலய வாயிலில் செய்தியாளர்களிடம் பேசிய அர்ஜுன் சம்பத், நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகும் திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்ற விடாமல் திமுக அரசு தடுத்து வந்தது போல, திமுக, கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளின் அழுத்தத்தின் காரணமாக தற்போதைய அரசும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது என்றும், ஆனால் தீபம் ஏற்றிட உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில் தமிழக வெற்றிக்கழக அரசு விரைவில் முருக பக்தர்களின் உரிமையை நிலைநாட்டி, உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்திட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் தமிழ் மொழி குறித்த விவாதத்தின் போது நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் கிறிஸ்தவ மதத்தை இணைத்து பேசியது தவறான முன்னுதாரணம் என்றும், இந்த கருத்துக்களை அவைகுறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்றார்.
இதையும் படிங்க: அதென்ன கசிவு..? லிஸ்ட் ரெடியா இருக்கு... வெயிட் பண்ணுங்க... ரகுபதிக்கு மரியவில்சன் பதிலடி..!
அமைச்சர் மரிய வில்சன் பேசிய போதே சபாநாயகர் கண்டித்து, முதலமைச்சர் உரிய அறிவுரை வழங்கி இருக்க வேண்டும் எனவும், பிறப்பிலேயே கிறிஸ்தவன் என கூறும் அமைச்சர் மரிய வில்சன் இயேசுநாதர் கூறிய அனைத்தையும் பின்பற்றுகிறாரா என்றும், ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டுகிறாரா எனவும், சகோதரனுடன் ஏற்பட்ட பிரச்சனையில் எதற்காக உருட்டு கட்டையை எடுத்துக்கொண்டு சென்றார் என கேள்வி எழுப்பினார்.
தனது கருத்துக்கு அமைச்சர் மரிய வில்சன் வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கோரிட வேண்டும் என அர்ஜுன் சம்பத் வலியுறுத்தினார். மேகதாது அணை கட்ட கர்நாடக அரசுக்கு சுற்றுச்சூழல் அமைச்சகம் ஒப்புதல் வழங்காமல் மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளதற்கு பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும், தொகுதி மறு வரையறை சட்டத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஆதரவு அளித்திட வேண்டும் என கேட்டு கொண்டார்.
கரப்பான் பூச்சி கட்சி, கம்யூனிஸ்டுகள் வெளிநாட்டில் இருந்து பணம் பெற்று உள்நாட்டில் வளர்ச்சித் திட்டங்களை தடுக்கிறார்கள் என்றும், தமிழ்நாட்டிற்கு நன்மை பயக்கும் வெளிநாட்டு நிதி பங்களிப்பு ஒழுங்குமுறை மசோதாவை அனைவரும் ஆதரித்திட வேண்டும் என கேட்டு கொண்டார்.
இதையும் படிங்க: கஜானா காலியா.? புதிய அறிவிப்புகளும், குற்றச்சாட்டுகளும்..!! பகீர் கிளப்பிய அமைச்சர் மரியவில்சன்..!