தவெக அரசின் வெள்ளை அறிக்கை... மரபு தெரியுமா..? சட்டபேரவையில் காரசார வாதம்..!
தமிழக வெற்றி கழக அரசு வெளியிட்ட வெள்ளை அறிக்கை தொடர்பாக சட்டப்பேரவையில் காரசார வாதம் நடைபெற்றது.
தமிழகத்தில் நடைபெற்ற 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் சமூக வெற்றி பெற்றது. தமிழ்நாட்டின் முதல்வராக விஜய் பொறுப்பேற்றார். அவர் முதல்வராக பொறுப்பேற்ற போது அரசு கஜானா தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று அறிவித்தார். அதன்படி அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வெள்ளையறுக்கை தயாரிக்கப்பட்டன. நிதி அமைச்சர் மரிய வில்சன் வெள்ளை அறிக்கை வெளியிட்டார்.
இன்று சட்டப்பேரவையில் இரண்டாம் நாள் அமர்வு நடைபெற்றது. அப்போது வெள்ளை அறிக்கை தொடர்பாக காரசார வாதம் முன்வைக்கப்பட்டது. அதிமுக எம்எல்ஏ சம்பத்குமார் வெள்ளை அறிக்கை தொடர்பாக கருத்து தெரிவித்தார். பேரவை கூடும் தேதி அறிவிக்கப்பட்ட பின் பேரவைக்கு வெளியில் வெள்ளை அறிக்கை வெளியிட்டிருக்க கூடாது என்று கூறினார். அதற்கு நிதி அமைச்சர் மரியவசன் பதில் கொடுத்தார்.
முதலமைச்சர் முதல் நாளிலேயே கூறியது ஊழல் லஞ்சம் அற்ற வெளிப்படையான அரசாக இருக்கும் என கூறியிருந்தார் என்றும் அப்போதே வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என கூறிவிட்டார். முதலமைச்சர் அறிவிப்பின்படியே வெள்ளை அறிக்கையை வெளியிட்டோம் எனவும் நிதி அமைச்சர் மரிய வில்சன் கூறினார். இதைத்தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளரும் எடப்பாடி தொகுதி எம்எல்ஏவுமான எடப்பாடி பழனிச்சாமி
இதையும் படிங்க: "மேகதாது வேண்டாம்".! CM விஜய் கொண்டு வந்த தீர்மானம்... முழு ஆதரவுடன் கைகோர்த்த எடப்பாடி பழனிச்சாமி"..!
பேசினார். சட்டப்பேரவை தலைவர் பேரவை கூடும் தேதி அறிவித்த பிறகு சட்டமன்றத்தில் தான் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் அது தான் மரபு என்றும் அதை தான் எங்கள் உறுப்பினர் கூறினார் எனவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
இதையும் படிங்க: தமிழகம் VS கர்நாடகா…! முதல்வர் விஜயின் மேகதாது எதிர்ப்பு தீர்மானம்… எதிர்க்கட்சிகள் ஒருமித்த குரல்..!!