PARTY FUND நேரடி பயனாளி ஸ்டாலின், உதய்..!! ஆதாரத்தை அள்ளி வீசிய CM விஜய்..!
சட்டப்பேரவையில் பார்ட்டிஃபண்ட் என்று குறிப்பிட்டு முதல்வர் விஜய் பேசினார்.
சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் பதிலுரை வழங்கி உள்ளார். அப்போது, பார்ட்டி பண்ட்டில் நேரடி பயனாளியாக முன்னாள் முதல்வர் ஸ்டாலின், முன்னாள் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பெயர் இடம் பெற்று இருப்பதையும் முதல்வர் விஜய் குறிப்பிட்டார். நகராட்சி குடிநீர் வழங்கல் துறையில் பார்ட்டி பண்ட் வழங்கப்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.
மது பாட்டிலுக்கு பத்து ரூபாய் முதல் 100 ரூபாய் வரை கூடுதலாக ஊழல் வசூலித்ததை முறையாக செய்துள்ளனர் எனவும் திமுக இருக்கும் இடத்தில் தான் தவறு நடக்கும் என்று தவறு நடக்கும் இடத்தில் தான் திமுக இருக்கும் எனவும் தெரிவித்தார். ஊழல் செய்வோம் தான் ஆதாரம் கேட்பார்கள் என்றும் ஊழலே செய்யாதோர் அமைதியாக இருப்பார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
மக்களை ஏமாற்றிய போலி பிம்பம், திமுகவின் பிராண்ட் உடைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். கரூர் கேங் என்று என்ன ஒரு சூப்பர் பெயர் பாருங்களேன் என்றும் கரூர் கேங் தலைவர் யார் என்று மக்கள் ஆவலாக உள்ளனர் என்றும் தெரிவித்தார். செய்யும் தவறையே முறையாக செய்யும் விஞ்ஞான ஊழலில் ஈடுபட்டு இருக்கிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார். அதிமுகவில் உருவாக்கப்பட்ட திட்டங்களை திமுக ஆட்சியில் ரத்து செய்தது ஏன் என்ற கேள்வி எழுப்பினார். திமுக ஆட்சியில் மூடுவிழா கண்ட அதிமுக அரசின் திட்டங்களை பட்டியலிட்டால் ஒரு நாளே போதாது என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: வீராணம் திட்டம் முதல் முரசொலி வரை..! EMI- ல் லஞ்சம்... திமுகவை பந்தாடிய முதல்வர் விஜய்..!!
அம்மா மினி கிளினிக், தாலிக்கு தங்கம், அம்மா பைக், ஆடு மாடு வழங்கும் திட்டம் திமுக ஆட்சியில் நிறுத்தப்பட்டதாகவும் பட்டியலிட்டார். அண்ணா, எம்ஜிஆர், என் டி ஆர் க்கு பின் விஜய் தான் என்றும் இறைவனும் இயற்கையும் என்றுமே நம் பக்கம்தான் இருப்பார்கள் எனவும் தெரிவித்தார். திமுக ஆட்சி காலத்தில் 4 ஆண்டுகள் மடிக்கணினி கொடுக்கவில்லை என்றும் ஜெ. ஜெயலலிதா பல்கலைக்கழகம் மூடப்பட்டது என்றும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மிசா வரலாறு எங்களுக்கும் தெரியும்.! நல்ல சாவே வராதாம்... என்ன பேச்சு..? பேரவையில் CM பதிலடி.!!