தமிழர்கள் சுட்டுக் கொலை.? கர்நாடகா கொடுத்த விளக்கம்..! பேரவையில் அமைச்சர் நிர்மல் குமார் உரை.!!
தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக அமைச்சர் நிர்மல் குமார் பேரவையில் விளக்கம் கொடுத்தார்.
கர்நாடக வனத்துறையால் தமிழக சட்டப்பேரவையில் தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம் சிறப்பு கவன ஈர்ப்புக்கு உள்ளானது. நான்கு நாள் விடுமுறைக்குப் பிறகு கூடிய அவையில் திமுக, அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தன. எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் இந்தச் சம்பவத்தை விவாதிக்கக் கோரினர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழர்கள் மூவர் சுட்டுக் கொல்லப்பட்டதைப் பேச அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
பாமக எம்.எல்.ஏ. கணேஷ்குமாரும் இதே கோரிக்கையை முன்வைத்தார். சபாநாயகர் உரிய நேரத்தில் அமைச்சர்களின் பதில்களைப் பெற்று அவையில் தெரிவிப்பதாக உறுதியளித்தார். இதனால் சட்டப்பேரவையில் இந்த விவகாரம் முக்கியத்துவம் பெற்றது.கர்நாடக மாநிலத்திலும் இந்தச் சம்பவம் சட்டசபையில் விவாதமாகி பதற்றத்தை ஏற்படுத்தியது.
அப்போது சட்டசபையில் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட மூன்று பேர் வனத்துறையால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட நிலையில் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். ஆகஸ்ட் 12ஆம் தேதி மூன்று தமிழர்கள் கொல்லப்பட்ட நிலையில் உரிய விசாரணை நடத்தப்படும் என கர்நாடக அரசு உறுதியளித்திருப்பதாக தெரிவித்துள்ளார். இடைக்கால நிவாரணம் 5 லட்ச ரூபாய் வழங்கிய கர்நாடக அரசு விசாரணைக்கு பின்பு கூடுதல் நிவாரணம் தருவதாக கூறி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தமிழர்கள் சுட்டுக்கொலை..! கர்நாடக வனத்துறை நிகழ்த்திய கொடூரம்... பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம்..!!
ஒரு சிலருக்கு திடீரென தமிழ் பாசம் மற்றும் தமிழர் பாசம் இருக்கும் என்றும் அமைச்சர் நிர்மல் குமார் விமர்சனம் செய்துள்ளார். அப்போது கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு அப்பாற்பட்டு அமைச்சர் நிர்மல் குமார் பேசியவை அவை குறிப்பில் இருந்து நீக்கப்படுவதாக சபாநாயகர் பிரபாகர் அறிவித்தார். மூன்று தமிழர்கள் கொலை தொடர்பாக கர்நாடகா அரசின் விளக்கம் ஏற்கத்தக்கதில்லை என்றும் விசாரணை தேவை என்றும் முதல்வர் கூறி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மருத்துவத்துறைக்கு 115 அறிவிப்புகள்.! விஜய் அரசின் ஸ்மார்ட் மூவ்... அமைச்சர் அருண் ராஜ் பேரவை உரை..!