சமூக நீதியைக் காப்பாற்றும் திராவிட மாடல்..! நிதி தராமல் அலைக்கழிக்கும் பாஜக... அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றச்சாட்டு..!!
சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு உரையாற்றினார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இப்போது நடைபெற்று வரும் இடைக்கால பட்ஜெட் விவாதம் மிகுந்த எதிர்பார்ப்புடனும், கடுமையான வார்த்தைப் போராட்டங்களுடனும் நிறைந்திருக்கிறது. இது வெறும் நிதி அறிக்கை விவாதம் மட்டுமல்ல. வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பான கடைசி பெரிய அரசியல் அரங்கு என்பதால் அனைத்துக் கட்சிகளும் தங்கள் பலத்தை முழுமையாகக் காட்டிக்கொண்டிருக்கின்றன. பிப்ரவரி 17-ஆம் தேதி நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு 2026-27 நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
அதன் மொத்த அளவு சுமார் 4.67 லட்சம் கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. வருவாய் பகுதியில் 3.44 லட்சம் கோடி ரூபாய் வரை எதிர்பார்க்கப்படுகிறது. செலவினங்கள் 3.93 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு உள்ளன. வேளாண் துறைக்கு தனியாக இடைக்கால பட்ஜெட் ஒன்றையும் வேளாண்மை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அதில் வேளாண் துறைக்கு 47,248 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.விவாதம் பிப்ரவரி 18-ஆம் தேதி தொடங்கியது.
இன்று சட்டப்பேரவையில் தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு உரையாற்றினார். அப்போது, சமூக நீதி அடிப்படையிலான திராவிட மாடல் அரசின் கொள்கைகள் நாட்டிற்கே வழிகாட்டுவதாக தெரிவித்தார். பெரியார் வழியில் வந்த திராவிட மாடல் அரசு சமூக நீதியை காத்து நிலைநாட்டிட பாடுபட்டு வருவதாக கூறினார். திராவிட மாடல் அரசானது சமூக நீதியை காப்பாற்றுவதற்காக என்றென்றும் போராடும் என்றும் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: விறுவிறு தேர்தல்... திமுக சார்பில் விருப்ப மனு விநியோகம்... தொண்டர்கள் ஆர்வம்..!!
மெட்ரோ ரயில் திட்டம் ஜல்ஜீவன் திட்டத்திற்கு நிதி தருவதை மத்திய பாஜக அரசு நிறுத்தி வைத்திருப்பதாகவும் குற்றம் சாட்டினார். அப்போது, திமுகவின் வாக்குறுதிகளை பட்டியலிட்டு நைனார் நாகேந்திரன் வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை என்ற குற்றச்சாட்டை முன் வைத்தார். மக்கள் பணியில் கவனம் தேவை என குறிப்பிட்டு திமுக விடிய ஆட்சியின் மதிப்பின் அட்டையை நயினார் நாகேந்திரன் வழங்கினார்.
இதையும் படிங்க: அரசியலில் திருப்புமுனை... திமுக கூட்டணியில் தேமுதிக...! ஒரே வார்த்தையில் முடிச்சிட்டாரு இபிஎஸ்..!!