×
 

தவெக அரசின் முதல் கேள்வி நேரம்..! விறுவிறுப்பாக தொடங்கிய சட்டப்பேரவை..! பதில் அளிக்கும் அமைச்சர்கள்..!!

தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆகஸ்ட் 5ஆம் தேதி தொடங்கிய 2026-27 நிதியாண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தொடர் செப்டம்பர் 8ஆம் தேதி வரை நீடிக்கும் என சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் ஏற்கனவே அறிவித்திருந்தார். பட்ஜெட் தாக்கல் மற்றும் பொது விவாதங்களுக்குப் பிறகு, ஆகஸ்ட் 17ஆம் தேதி முதல் துறை வாரியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் தொடங்கியுள்ளன.

இதுவரை வருவாய், மருத்துவம், நெடுஞ்சாலைகள், நீர்வளம், ஊரக வளர்ச்சி, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு, கூட்டுறவு, உயர்கல்வி உள்ளிட்ட பல துறைகளின் மானியக் கோரிக்கைகள் விவாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளன. இந்தச் சூழலில் இன்று சமூக நீதித்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மீதான மானியக் கோரிக்கைகள் விவாதிக்கப்பட்டு வருகின்றன.

சட்டப்பேரவையில் அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, வெங்கட்ரமணன் உள்ளிட்டோர் பதில் கொடுத்து வருகின்றனர். கோவை மருத்துவமனையில் மருத்துவர் மற்றும் செவிலியர் பற்றாக்குறை இருப்பதாக கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் கொடுக்கப்பட்டது. திருத்தணி மருத்துவமனையில் எம்ஆர்ஐ ஸ்கேன் தொடர்பாகவும் கேள்வி எழுப்பப்பட்டது.

இதையும் படிங்க: சமூக நீதியில் விஜய் அரசின் அடுத்த அதிரடி? இன்று சட்டப்பேரவையில் முக்கிய விவாதம்!

ஆய்வு செய்து உடனடியாக நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதில் கொடுக்கப்பட்டுள்ளது. இருளர் மக்களுக்கு சாதி சான்றிதழ் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் சட்டப்பேரவையில் வலியுறுத்தப்பட்டது. 10 கிராம மக்கள் இரண்டு ஆட்சியா அலுவலகங்களுக்கு அலையும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டது. தொடர்ந்து பல்வேறு கேள்விகளை சட்டமன்ற உறுப்பினர்கள் முன்வைத்து வரும் நிலையில் அதற்கு அமைச்சர்கள் பதில் கொடுத்து வருகின்றனர். 

இதையும் படிங்க: தேவையா.? பேரவையில் குழாயடி சண்டை...! சிபிஎம் சண்முகம் குற்றச்சாட்டு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share