வீ த லீடர்ஸ் மாநிலப் பொருளாளராக பாலாஜி உத்தம ராமசாமி நியமனம்: அண்ணாமலை அறிவிப்பு!
'வீ த லீடர்ஸ்' அமைப்பின் மாநிலப் பொருளாளராக பாலாஜி உத்தம ராமசாமியை நியமித்து அந்த அமைப்பின் நிறுவனத் தலைவர் அண்ணாமலை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
'வீ த லீடர்ஸ்' (We The Leaders) அமைப்பின் மாநிலப் பொருளாளராகப் பாலாஜி உத்தம ராமசாமி நியமிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பின் நிறுவனத் தலைவர் கே. அண்ணாமலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்; விஜயதசமி நன்னாளில் தொடங்கும் இந்த புதிய பொறுப்பானது அமைப்பின் வளர்ச்சிக்கும் அதன் வலிமைக்கும் மேலும் துணைபுரியட்டும் என்றும் அவர் வாழ்த்தியுள்ளார்.
அரசியல் மற்றும் சமூகக் களத்தில் மாற்றத்தை உருவாக்கும் நோக்கில் தொடங்கப்பட்ட 'We The Leaders' அமைப்பின் நிறுவனத் தலைவர் கே. அண்ணாமலை, அமைப்பின் நிர்வாகக் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்காக வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவித்ததாவது:
"விஜயதசமி திருநாளான இந்நன்னாளில் (20.10.2026), நமது We The Leaders அமைப்பின் நிர்வாகக் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தவும், நிதி நிர்வாகத்தைச் சிறப்பாக ஒருங்கிணைக்கவும் திரு. பாலாஜி உத்தம ராமசாமி அவர்கள் மாநிலப் பொருளாளராக நியமிக்கப்படுகிறார்.
இதையும் படிங்க: உள்ளாட்சித் தேர்தலுக்குத் தயாராகுங்கள்: 12,525 பஞ்சாயத்து தலைவர்கள் வேண்டும் - அண்ணாமலை அதிரடி!
நமது அமைப்பின் நிதி நிர்வாகம், வரவு செலவுக் கணக்குகளை முறைப்படுத்துதல் மற்றும் நிதி சார்ந்த செயல்பாடுகளை முழுமையான வெளிப்படைத்தன்மையுடனும் பொறுப்புணர்வுடனும் ஒருங்கிணைத்தல் ஆகிய பணிகளை அவர் முன்னின்று மேற்கொள்வார்.
பாலாஜி உத்தம ராமசாமி அவர்கள் தனது பொறுப்பில் முழு அர்ப்பணிப்புடனும் நேர்மையுடனும் செயல்பட்டு, நமது அமைப்பின் வளர்ச்சிக்கும், அதன் நோக்கங்களை நிறைவேற்றுவதற்கும் சிறப்பான பங்களிப்பை வழங்கிட நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
விஜயதசமி நன்னாளில் தொடங்கும் இந்தப் புதிய பொறுப்பு, நமது We The Leaders அமைப்பின் வளர்ச்சிக்கும், வலிமைக்கும் மேலும் துணைபுரியட்டும்" என்று நிறுவனத் தலைவர் அண்ணாமலை தனது கையொப்பமிட்ட அதிகாரப்பூர்வ கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு 'வீ த லீடர்ஸ்' அமைப்பிற்கு மாநில அளவில் புதிய பொருளாளர் நியமிக்கப்பட்டு நிர்வாகக் கட்டமைப்பு பலப்படுத்தப்பட்டிருப்பது அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: உள்ளாட்சித் தேர்தலுக்குத் தயாராகுங்கள்: 12,525 பஞ்சாயத்து தலைவர்கள் வேண்டும் - அண்ணாமலை அதிரடி!