என் பேருதானே முதல்ல வரணும்? கீர்த்தனா பெயரை ஏன் போட்டீங்க? கலெக்டரிடம் அமைச்சர் ஜெகதீஸ்வரி வாக்குவாதம்?!
விருதுநகரில் சிலம்ப வீரர், வீராங்கனைகளுக்கு பரிசு வழங்கும் விழா இன்று காலை தொடங்கியது.
விருதுநகரில் நடைபெற்ற சிலம்ப வீரர், வீராங்கனைகளுக்கான பாராட்டு விழாவில் பேனர் விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட சம்பவம் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சர்களின் பெயர்கள் இடம்பெற்ற வரிசை குறித்து எழுந்த கேள்வி நிகழ்ச்சியின் தொடக்கத்திலேயே கவனத்தை ஈர்த்தது.
விருதுநகரில் சிலம்பம் விளையாட்டில் சாதனை படைத்த வீரர், வீராங்கனைகளுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கும் விழா இன்று காலை நடைபெற்றது. மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்ச்சிக்காக சிறப்பு பேனர்களும் வைக்கப்பட்டிருந்தன.
அந்த பேனரில் தமிழ்நாடு தொழில் மற்றும் முதலீட்டு ஊக்கத் துறை அமைச்சர் கீர்த்தனாவின் பெயர் முதலில் இடம்பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து விளையாட்டுத் துறை அமைச்சர் மற்றும் மாவட்ட பொறுப்பு அமைச்சரான ஜெகதீஸ்வரியின் பெயர் இடம் பெற்றிருந்தது. இந்த வரிசை நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பே சிலரின் கவனத்தை ஈர்த்ததாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: “ஜோசப் விஜய் பெயரைக் கேட்டாலே...” - எதிர்க்கட்சிகளை எச்சரித்த செங்கோட்டையன்... இபிஎஸுக்கு சொன்ன மறைமுக மெசெஜ்...!
விழாவில் பங்கேற்க வந்த அமைச்சர் ஜெகதீஸ்வரி, பேனரை பார்த்ததும் அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மாவட்ட பொறுப்பு அமைச்சர் மற்றும் நிகழ்ச்சியுடன் நேரடியாக தொடர்புடைய துறையின் அமைச்சராக இருக்கும் நிலையில், தனது பெயர் ஏன் முதலில் இடம்பெறவில்லை என அவர் கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அமைச்சர் ஜெகதீஸ்வரி, நிகழ்ச்சி ஏற்பாடுகளை கவனித்த மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக விளக்கம் கேட்டதாகவும், இதனால் அங்கு சில நிமிடங்கள் பரபரப்பான சூழல் நிலவியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பின்னர் அதிகாரிகள் விளக்கம் அளித்ததைத் தொடர்ந்து நிகழ்ச்சி வழக்கம்போல் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பான தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன. அரசு நிகழ்ச்சிகளில் பதவிக்குரிய முன்னுரிமை, பெயர் வரிசை மற்றும் நடைமுறை விதிகள் குறித்து மீண்டும் விவாதங்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில், சிலம்ப வீரர் மற்றும் வீராங்கனைகளை கௌரவிக்கும் நிகழ்ச்சியில் ஏற்பட்ட இந்த பேனர் சர்ச்சை, விழாவை விட அதிகமாக பேசப்படும் விஷயமாக மாறியுள்ளது. மாவட்ட நிர்வாகம் சார்பில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ விளக்கம் எதுவும் வெளியிடப்படவில்லை.
இதையும் படிங்க: வேளாண் பல்கலை.யில் காலி பணியிடங்கள்..! சிறப்பு ஆட்சேர்ப்பு முகாம் நடத்துங்க..! வேல்முருகன் வலியுறுத்தல்..!!