தேமுதிக-வை வைத்து காங்கிரஸுக்கு செக்! திமுக மாஸ்! அரசியல் சதுரங்கங்கத்தில் கச்சிதமாய் காய் நகர்த்தும் மு.க.ஸ்டாலின்!
ஆட்சியில் பங்கு வேண்டும்; அதிக தொகுதிகள் வேண்டும்' என, தமிழக காங்கிரஸ் கோரிக்கை வைத்துள்ளது. 'ஆட்சியில் பங்கு இல்லை' என்பதை, ஏற்கனவே முதல்வர் ஸ்டாலின் அறிவித்து விட்டார்.
தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக கூட்டணி அரசியல் சூடுபிடித்துள்ளது. தே.மு.தி.க. தலைவி பிரேமலதா விஜயகாந்த் திமுக கூட்டணியில் இணைந்துள்ளார். இது ஆளும் திமுகவுக்கு பெரும் வலுச்சேர்க்கும் நகர்வாக இருந்தாலும், காங்கிரஸ் கட்சிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திமுக கூட்டணியில் ஆட்சியில் பங்கு மற்றும் 25க்கும் மேற்பட்ட தொகுதிகள் கோரி காங்கிரஸ் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தது. ஆனால், முதல்வர் மு.க.ஸ்டாலின் "ஆட்சியில் பங்கு இல்லை" என்று தெளிவாக அறிவித்துவிட்டார்.
தொகுதி பங்கீட்டிலும் 25க்கு மேல் கொடுக்க திமுக விரும்பவில்லை. இந்நிலையில் தே.மு.தி.க.வை கூட்டணியில் சேர்த்து காங்கிரஸுக்கு 'செக்' வைத்துள்ளது திமுக தலைமை. இனி காங்கிரஸால் வலுவாக பேரம் பேச முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
இதையும் படிங்க: இப்பிடி கோட்டை விட்டுட்டீங்களே இபிஎஸ்!! நழுவிய தேமுதிக! குமுறும் பாஜக!! எடப்பாடிக்கு டெல்லி டோஸ்!
தே.மு.தி.க. வரலாற்றில் 2006 சட்டசபை தேர்தலில் விஜயகாந்த் மட்டும் வென்றார். தனித்து போட்டியிட்டு 8% ஓட்டு பெற்றது. 2011-ல் அதிமுக கூட்டணியில் 41 தொகுதிகளில் போட்டியிட்டு 29 எம்எல்ஏக்களை பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்து பெற்றது.
ஆனால் 2014, 2019, 2024 லோக்சபா தேர்தல்களிலும், 2016, 2021 சட்டசபை தேர்தல்களிலும் தொடர்ந்து தோல்வி அடைந்தது. தற்போது 2%க்கும் குறைவான ஓட்டு வங்கி மட்டுமே உள்ளது. கட்சி அங்கீகாரத்தை தக்க வைத்துக்கொள்ளவும், முரசு சின்னத்தை காப்பாற்றவும் கூட்டணி அவசியம் என்பதால் பிரேமலதா முடிவெடுத்தார்.
அதிமுக கூட்டணியில் இணைய பழனிசாமி விரும்பவில்லை. தே.மு.தி.க.வில் 50க்கும் மேற்பட்ட மாவட்டச் செயலர்கள் திமுக கூட்டணியை விரும்பியதால், பிரேமலதா முடிவெடுத்தார். திமுக மூத்த அமைச்சர் எ.வ.வேலு, அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
எ.வ.வேலு வீட்டுக்கு ஆறு முறை தே.மு.தி.க. பொருளாளர் சுதீஷ் சென்றார். இறுதியாக 6 சட்டசபை தொகுதிகள் + ஒரு ராஜ்யசபா இடம் என உறுதி அளிக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்டு தே.மு.தி.க. திமுக கூட்டணியில் இணைந்துள்ளது.
இந்த கூட்டணி திமுகவுக்கு தென் மாவட்டங்களில் கூடுதல் வலு சேர்க்கும். காங்கிரஸ் இப்போது தொகுதி பங்கீட்டில் பின்னடைவை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 2026 தேர்தலில் தமிழக அரசியல் களம் எப்படி அமையும் என்பதை இந்த நகர்வு மேலும் சுவாரஸ்யமாக்கியுள்ளது.
இதையும் படிங்க: திமுக கூட்டணியில் இணைந்தது தேமுதிக?! அடுத்தவாரம் வெளியாகும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!