×
 

அலங்காரத்திற்காகவே கல்விக்கொள்கை.. நாடகமாடும் திமுக அரசு.. கிழித்து தொங்கவிடும் அண்ணாமலை..!!

மாநிலக் கல்விக் கொள்கை என்ற பெயரில் இன்று மீண்டும் ஒரு நாடகம் என பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டிற்கென பிரத்யேகமான மாநில கல்விக் கொள்கையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று வெளியிட்டார். மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கை 2020-க்கு மாற்றாக, தமிழ்நாட்டின் வரலாறு, கலாச்சாரம் மற்றும் எதிர்கால இலக்குகளுக்கு ஏற்ப இந்தக் கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது. 2021-22 நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டபடி, ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் 14 பேர் கொண்ட உயர்மட்டக் குழு 650 பக்கங்கள் கொண்ட அறிக்கையை கடந்த ஜூலை 1-ல் சமர்ப்பித்தது. இந்த அறிக்கை பள்ளி மற்றும் உயர்கல்விக்கு தனித்தனியாகப் பிரிக்கப்பட்டு, முதற்கட்டமாக பள்ளிக் கல்விக் கொள்கை வெளியிடப்பட்டுள்ளது.

இந்தக் கொள்கை தமிழ் மற்றும் ஆங்கிலம் என்ற இருமொழிக் கொள்கையை வலியுறுத்துகிறது. 3, 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படக் கூடாது எனவும், தாய்மொழி வழிக் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் எனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. குழந்தைகளை மையமாகக் கொண்ட கல்வி முறை, உடற்கல்வி மற்றும் விளையாட்டுக்கு முக்கியத்துவம், மாணவர்களின் படைப்புத் திறனை மேம்படுத்துதல் ஆகியவை இதன் முக்கிய அம்சங்களாகும். மாநிலத்தின் கல்வித்துறையில் சமூக நீதி மற்றும் சமத்துவத்தை உறுதி செய்யும் வகையில் இந்தக் கொள்கை அமைந்துள்ளதாக கல்வியாளர்கள் கருதுகின்றனர்.

இதையும் படிங்க: மாஸ்டர் பிளான் போடும் ஓ.பி.எஸ்.. பார்க்கில் முதல்வருடன் சந்திப்பு.. என்ன காரணம்..?

இந்நிலையில் இந்த மாநிலக் கல்விக் கொள்கை குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை. நாளொரு மேடை, பொழுதொரு நடிப்பு என்று நான்கு ஆண்டுகளாக வெறும் விளம்பரத்திலேயே ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் முதலமைச்சர் மு.க ஸ்டாலின், மாநிலக் கல்விக் கொள்கை வெளியீடு என்ற பெயரில் இன்று மீண்டும் ஒரு நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறார் என்றும் தேசிய அளவில் ஒருங்கிணைந்த கல்வி முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்டு, பிரதமர் மோடி கொண்டு வந்த தேசியக் கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம் என்று கூறி, கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் மாநிலக் கல்விக் கொள்கை என்ற பெயரில் ஒரு குழுவை அமைத்தார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் என்றும் கூறினார். 

இந்தக் குழு, இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, கடந்த 2024 ஆம் ஆண்டு, தனது வரைவு அறிக்கையை சமர்ப்பித்தது. இந்தக் குழுவின் பரிந்துரைகளில் முக்கியமான பல கொள்கைகள், தேசியக் கல்விக் கொள்கையிலிருந்து எடுக்கப்பட்டவை என்பதை நாம் ஏற்கனவே சுட்டிக் காட்டியிருந்தோம். மேலும், காலை உணவுத் திட்டம், இல்லம் தேடிக் கல்வி உள்ளிட்ட தேசியக் கல்விக் கொள்கையிலிருந்து பல திட்டங்களை, ஏற்கனவே செயல்படுத்திக் கொண்டிருக்கிறது திமுக அரசு என்று அண்ணாமலை தெரிவித்தார். 

மேலும் மாநிலக் கல்விக் கொள்கை குழு அமைத்து மூன்று ஆண்டுகள் கடந்து விட்டன. இந்த வருடக் கல்வி ஆண்டும் தொடங்கி விட்டது. இன்னும் ஏழு மாதங்களில், திமுக ஆட்சியும் அகற்றப்படவிருக்கிறது. மூன்று ஆண்டுகளாக தூங்கிக் கொண்டு, தற்போது இந்தக் கல்விக் கொள்கையை வெளியிடுவோம் என்பது, வெறும் விளம்பரம் என்று குற்றம்சாட்டிய அண்ணாமலை, தமிழகம் முழுவதும், அமைச்சரின் சொந்த மாவட்டம் உட்பட பல பள்ளிகள் கட்டிடமின்றி மரத்தடியில் செயல்பட்டு வருகின்றன. திமுக ஒப்பந்ததாரர்களால் கட்டப்பட்ட பல பள்ளிக் கட்டிடங்கள், முதலமைச்சர் திறந்து வைத்த அடுத்த சில நாட்களிலேயே இடிந்து விழுந்து கொண்டிருக்கின்றன. இவற்றை சரி செய்யாமல், வெறும் அலங்காரத்திற்காகக் கல்விக் கொள்கை என்று திமுக அரசு நாடகமாடிக் கொண்டிருக்கிறது என்று தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க: இரட்டை இலக்க வளர்ச்சி விகிதத்துடன் தமிழ்நாடு முதலிடம்.. மார்தட்டிக்கொள்ளும் முதல்வர் ஸ்டாலின்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share