“இந்த கருணாநிதியை விட்டால் பெரிய பிரச்சனையாகிடும்...” - வாண்டடாக திமுகவை சீண்டிய அண்ணாமலை...!
கோபாலபுரத்தில் இருந்த ஒரு கருணாநிதிக்காக நாம் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறோம் என பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை விமர்சனம்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு அதிமுக சார்பில் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ. ராஜு, விளாத்திகுளம் அதிமுக வேட்பாளர் சத்யா ஆகியோரை ஆதரித்து முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில் : தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ. ராஜீவை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும். அதேபோன்று விளாத்திகுளம் அதிமுக வேட்பாளர் சத்யாவையும் வெற்றி பெற வைக்க வேண்டும். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வரும் மே நான்காம் தேதி வெற்றி பெற்று முதலமைச்சராக ஆட்சிக் கட்டிலில் அமரும்போது 210 சட்டமன்ற உறுப்பினர்களில் இங்கிருக்கும் இரண்டு பேரும் சட்டமன்ற உறுப்பினராக இருப்பார்கள்.
கோவில்பட்டி நகரம் என்பது சாதாரண நகரம் கிடையாது இங்கிருந்து தான் இந்தியாவிற்கு தீப்பெட்டி செல்கிறது. சுவை மிகுந்த கோவில்பட்டி கடலை மிட்டாய் இவை இங்கு உள்ள மக்களின் கடினமான உழைப்புக்கு சாட்சியாக உள்ளது. எப்படி மத்திய அரசு கோவில்பட்டி மக்களுடன் தொடர்பு இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியும்
இதையும் படிங்க: அண்ணாமலை மீது மான நஷ்ட வழக்கு தொடர்வேன்... முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் ஆவேசம்...!
தீப்பெட்டிக்கு ஜிஎஸ்டி வரி குறைப்பு தொடர்பாக முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ. ராஜு மற்றும் பாஜக தலைவர்கள் சேர்ந்து கோரிக்கை வைத்தனர். 18 சதவீதம் இருந்த ஜிஎஸ்டி வரி இன்றைக்கு 5% குறைக்கப்பட்டுள்ளது. அதேபோன்று கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு மத்திய அரசின் புவிசார் குறியீடு கிடைக்கப்பெற்றுள்ளது. அதற்கு முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ. ராஜீ முயற்சி மேற்கொண்டதன் காரணமாக இன்றைக்கு உலகம் முழுவதும் கோவில்பட்டி கடலை மிட்டாய் செல்கிறது.
மேலும் இந்த கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் மட்டும் நான்கு வங்கிகளை மத்திய அரசு வழங்கி உள்ளது. வந்தே பாரத் ரயில் முதல் நிற்காத ஐந்து ரயில்கள் கூட கோவில்பட்டியில் நிற்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் யார் என்றால் கருணாநிதி. கோபாலபுரத்தில் இருந்த ஒரு கருணாநிதிக்காக நாம் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறோம். கோவில்பட்டியில் இன்னொரு கருணாநிதியை விட்டால் பெரிய பிரச்சனையாகிவிடும். ஒரு கருணாநிதி விட்டதற்கு தமிழகம் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறது. கோவில்பட்டிக்கு இன்னொரு கருணாநிதி வேண்டாம் என்பதை முடிவெடுக்க வேண்டும் அருமை சொந்தங்களே
கோவில்பட்டியில் பிரச்சாரம் மேற்கொண்ட கனிமொழி எம்பி பொய்யாக சொல்லி உள்ளார். அவர் பொய்யாக சொல்லியதற்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் தற்போது ஏற்பட்டுள்ளது. கனிமொழி எம்பி பேசும்போது கருணாநிதி என்ற பெயர் இருந்தாலே தேர்தலில் தோற்க மாட்டார்கள் என்று கூறியுள்ளார்.
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் இருக்கும்போது மூன்று முறை (1977,80,84)கருணாநிதிக்கு முதல்வர் கனவு என்பது இன்றைக்கு சுட்டெரிக்கும் வெயிலில் தண்ணீர் எப்படி களைந்து போகுமோ அது போல கனவு களைந்து போனாது. எம். ஜீ. ஆரிடம் 3 முறை தோற்றுப் போனவர் கருணாநிதி. கருணாநிதி என்றால் அரசியல் தோற்கமாட்டார்கள் என்று கனிமொழி எம்பி இங்கு வந்து பாடம் எடுக்கிறார். கருணாநிதியால் ஒரு முறை கூட ஆட்சியை தக்க வைக்க முடியவில்லை. ஒருமுறை முதல்வராக இருந்தால் அரசியல் வரலாற்றில் இரண்டாவது முறை தொடர்ச்சியாக முதல்வராக வந்ததில்லை.
திமுக ஆட்சியை ஒருமுறை பார்த்து விட்டால் மறுமுறை ஒதுக்கி வைத்து விடுவார்கள் மக்கள். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஒருமுறை அல்ல இரண்டு முறை திமுக ஆட்சியை ஒதுக்கி வைத்திருந்தார். கோவில்பட்டி தொகுதியில் நிற்கும் கருணாநிதி நகர் மன்ற தலைவராக இருந்த போது மொத்த நிர்வாக சீர்கேட்டிற்கும் இலக்கணமாக இருப்பவர் எனக்கூறினார்.
இதையும் படிங்க: திராவிட இயக்க அரிச்சுவடி தெரியுமா உனக்கு?... அண்ணாமலையை கிழித்து தொங்கவிட்ட வைகோ...!