கமலாலயத்தில் திடீரென குவிந்த முக்கிய புள்ளிகள்... தீவிர ஆலோசனை - என்ன காரணம்?
சென்னை தியாகராய நகரில் உள்ள கமலாலயத்தில் நயினார் நாகேந்திரன் தலைமையில் பாஜக மையக்குழு கூட்டம் தொடங்கியது.
2026 சட்டமன்ற தேர்தலுக்கு தயாராக கூடிய விதமாக பாஜகவில் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு இருக்கின்றார்கள். ஏற்கனவே பாஜகவின் மேலிட பார்வையாளர்கள் தமிழகத்திற்கு நியமிக்கப்பட்டிருந்த நிலையில் தற்பொழுது தேர்தல் பொறுப்பாளர்களாக டெல்லியில் பாஜக ஆட்சிக்கு வரக்கூடிய வகையிலாக வியூகம் வகுத்திருந்த பாஜகவினுடைய நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான பைஜயந்த் பாண்டா மற்றும் முரளிதரர் ஆகிய இரண்டு பேரை தமிழகத்திற்கான தேர்தல் பொறுப்பாளர்களாக பாஜக தலைமை நியமித்திருக்கின்றது. இந்த நிலையில் தான் இன்று பாஜக சார்பிலே அந்த தேர்தல் பொறுப்பாளர்களை அறிமுகம் செய்யக்கூடிய விதமாக முக்கிய நிர்வாகிகளோடு தேர்தல் தொடர்பான கூட்டணி குறித்த நிலைப்பாடுகளை ஆலோசிக்க கூடிய வகையில் மையக் குழு கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டமானது பாஜகவின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் நடைபெறுகின்றது.
பாஜாகாவின் தேர்தல் பொறுப்பாளர்கள் மட்டுமல்லாமல் மேலிட பொறுப்பாளர்களான மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பாஜாகவின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டவர்கள் பங்கேற்றி இருக்கின்றார்கள். ஏறக்குரிய இரவு 8 மணி வரை நடைபெறக்கூடிய இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி தற்பொழுது எவ்வாறு இருக்கின்றது. தேசிய ஜனநாயக கூட்டணியில் கடந்த காலத்தில் இருந்தவர்களை மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் கொண்டு வருவதற்கான வியூகங்கள் என்ன என்பது தொடர்பாக ஆலோசிக்கப்படுகின்றது.
அது மட்டுமல்லாமல் அதிமுக பொதுச் செயலாளர் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து தேர்தல் பரப்புரையிலே ஈடுபட்டு வருகின்றார். அவரோடு இணைந்து பாஜாகவும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடக்கூடிய விதமாக பயண திட்டத்தை வகுப்பதற்கான ஆலோசனை நடைபெறுகின்றது. அதுமட்டுமல்லாமல் வரும் 12 ஆம் தேதி மதுரையிலிருந்து பாஜகவின் மாநிலத் தலைவர் நைனா நாகேந்திரன் தேர்தல் பரப்புரையை தொடங்குகின்றார். ஒவ்வொரு நாளிலும் மாலை நேரத்திலே மிகப்பெரிய அளவில் பொதுக்கூட்டமாக அதை நடத்துவதற்கு ஏற்பாடு செய்து கொண்டிருக்கின்றார்கள்.
இதையும் படிங்க: தேர்தல் வருது… ரூ.10 லட்சம் கொடு! அண்ணாமலையின் பெயரை சொல்லி பணம் கேட்டு மிரட்டல்… பகீர் கிளப்பும் வீடியோ…!
அந்த அடிப்படையில் நயினார் நாகேந்திரன் உடைய பயண திட்டம், சுற்றுப்பயணத்தின் பொழுது எவ்வாறு மக்களை கவரக்கூடிய வகையில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட வேண்டும், ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதியிலும் வாக்காளர்களை தாண்டி அந்தந்த பகுதியில் இருக்கக்கூடிய வட்டார தலைவர்களை சமூக அமைப்புகளை சந்தித்து ஆதரவு திரட்டுவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் தொடர்பாக இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகின்றது.
இதையும் படிங்க: அடிமை அதிமுக, ஒட்டுண்ணி பாஜக... தமிழ்நாட்டு மீனவர்கள்-னா எளக்காரமா? லெப்ட் ரைட் வாங்கிய முதல்வர்…!