×
 

“பிரசாரம் செய்ய விரும்பாத விஜய் போலீஸ் மீது பழி போடுகிறார்”... எல்.முருகன் கடும் விமர்சனம்...!

சாக்கு போக்கு சொல்லி தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்காமல் போலீஸ் மீது புகார் செய்து வருகிறார்-  விஜய் மீது அவிநாசி தொகுதி வேட்பாளர் எல் முருகன் விமர்சனம்

அவிநாசி (தனி) தொகுதியில் பா.ஜ வேட்பாளராக போட்டியிடும் ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் கோவை மாவட்டம், அன்னூர் அருகே சாலையூர் - பழனியாண்டவர் கோவிலில் வழிபாடு செய்து தேர்தல் பிரச்சாரத்தை துவக்கினார். அருகில் உள்ள பெரியபுத்தூர் கிரமத்தில் பிரச்சாரத்தை துவக்கிய போது அங்கு கூடியிருந்த மக்களிடம் நீங்கள் கேட்ட முக்கிய கோரிக்கைகளை நான் வெற்றி பெற்ற உடனே முதல் கையெழுத்திட்டு நிறைவேற்றி தருவேன் என்று கூறினார். இவை ஊராட்சி தலைவர் தேர்தலில் தெரிவிக்கப்படும் வாக்குறுதி போல் ஒன்றிய இணை அமைச்சர் வாக்குறுதியை தெரிவித்தார். 

கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு பயன் தரும் அத்திக்கடவு திட்டம் 1852 கோடி ரூபாயில் மாநில அரசு நிதியில் நிறைவேற்றப்பட்டது. ஆனால் பா.ஜ வேட்பாளர் எல்.முருகன் பேசுகையில் ஒன்றிய அரசு நிதியில் இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டது என்று கூறியது அங்கு கூடியிருந்த பொதுமக்கள் இடையே ஆச்சரியத்தை அளித்தது.

பிரச்சாரத்தின் உரையை முடித்த பிறகு பொதுமக்களிடம் வேட்பாளர் எல்.முருகன் நீங்கள் யாருக்கு வாக்களிப்பீர்கள்? என்று கேட்டபோது, பொதுமக்கள் இரட்டை இலை என்று கூறினர். இதைக் கேட்டு வேட்பாளர் முருகன் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் வேட்பாளர் முருகன் பொதுமக்களிடம் இரட்டை இலை இங்கு போட்டியிடவில்லை. தாமரை சின்னம்தான் போட்டியிடுகிறது. எனவே உங்கள் சின்னம் தாமரை சின்னம்... தாமரை சின்னம்... என்று கூறும்படி திரும்பத் திரும்ப கூறி, பொதுமக்களை திரும்பச் சொல்லும் படி கூறினார். இரட்டி இலையும், தாமரையும் ஒன்று... இரட்டை இலையும், தாமரையும் ஒன்று... இரட்டை இலையும், தாமரையும் ஒன்று ஓட்டு அளிக்க போகும்போது  இரட்டை இலை இந்தத் தொகுதியில் இருக்காது. தாமரை இருக்கும் அதனால் நமது சின்னம் தாமரை எனக் கூறி வாக்கு சேகரிக்க பொதுமக்களுக்கு வகுப்பு எடுத்தார். எம்ஜிஆரின் சின்னம் தாமரை, ஜெயலலிதாவின் சின்னம் தாமரை, மோடி அவர்களின் சின்னம் தாமரை சின்னம்தான் என்று கூறியபடி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். 

இதையும் படிங்க: விஜய்க்கு அடி மேல் அடி... கால் வைத்த இடமெல்லாம் கண்ணிவெடி...தவெகவினருக்கு வெளியானது அதிர்ச்சி செய்தி...!!

மேலும் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், புதிதாக கட்சி துவக்கி உள்ள நடிகர் தனது கூட்டத்தில் 41 பேர் இறந்தும் அவர்களை நேரில் சந்தித்து அனுதாபம் தெரிவிக்காத ஒருவர். தமிழகத்தை எப்படி ஆள முடியும் என்றார். அந்த நடிகர் ஒருநாள் பிரச்சாரம் செய்கிறார். மறுநாள் கைவலி, கால் வலி, வயிற்று வலி, போலீஸ் அனுமதி தரவில்லை என ஏதாவது காரணம் கூறிவிட்டு வீட்டிலேயே முடங்கி கிடக்கிறார்.

இவர் எப்படி தமிழகத்தை ஆட்சி செய்ய முடியும். கடந்த மாதம் முதல் தற்பொழுது தற்போது வரை கட்சியின் ஆதரவு கீழ் நோக்கி சென்று கொண்டுள்ளது என்றார். இந்தப் பிரச்சாரத்தில் பள்ளி மாணவர்களின் கையில் கட்சி கொடியை ஏந்திய படி பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: விஜய்க்காக காத்திருந்த தவெகவினர் தலையில் இறங்கியது இடி... ஷாக்கிங் தகவலால் பரபரப்பு...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share