"கொஞ்சம் கண்ணும் கருத்துமா பாருங்க அண்ணா..." - பாஜகவினருக்கு அண்ணாமலை அறிவுறுத்தல்...!
திமுக,பாஜக, அதிமுகவில் தொடங்கி புதிதாக ஆரம்பிக்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகம் வரை தங்களது பூத் ஏஜெண்டுகள் மூலமாக SIR பணிகளை கண்காணித்து வருகின்றனர்.
தமிழகத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணி (SIR) -க்காக நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் நடுநிலையாக செயல்படவில்லை என பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழகத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் முழுவீச்சில் நடத்தப்பட்டு வருகின்றன. நவம்பர் 4ம் தேதி தொடங்கிய இந்த பணிகளை டிசம்பர் 4ம் தேதிக்குள் முடிக்க உத்தரவிட்டுள்ளது. இதற்காக நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக சென்று படிவங்களை விநியோகித்து வருகின்றனர். அப்படி விநியோகிக்கப்படும் படிவங்களை பூர்த்தி செய்ய முடியவில்லை என்றும், சிலருக்கு இரண்டு படிவங்கள் வழங்கப்படுவதாகவும்,
படிவங்களில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை முழுவதுமாக பூர்த்தி செய்ய தெரியவில்லை என்றும் மக்கள் தரப்பிலிருந்து அடுத்தடுத்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. மற்றொருபுறம் SIR பணிகளில் ஈடுபட்டு வரும் பணியாளர்கள் தமிழக மக்கள் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களிலும் பணி அழுத்தம் மற்றும் விரக்தி காரணமாக தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது.
இதையும் படிங்க: ரூ.309 கோடியை ஏப்பம் விட்ட திமுக... ஸ்டாலினின் மறுபக்கத்தை விவசாயிகளுக்கு வெளிச்சம் போட்டு காட்டிய அண்ணாமலை...!
இதற்கிடையே தமிழகத்தில் SIR பணிகளில் எந்தவித குளறுபடியும் நடந்துவிடக் கூடாது என்பதற்காகவும் தகுதியுள்ள வாக்காளர்கள் நீக்கப்பட்டு விடக்கூடாது எனவும் திமுக,பாஜக, அதிமுகவில் தொடங்கி புதிதாக ஆரம்பிக்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகம் வரை தங்களது பூத் ஏஜெண்டுகள் மூலமாக SIR பணிகளை கண்காணித்து வருகின்றனர்.
இப்படி தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், பாஜகவினருக்கு கட்சியின் முன்னாள் மாநில தலைவரான அண்ணாமலை கொடுத்துள்ள பரபரப்பு அட்வைஸ் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.
சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜகவின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் SIR பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. பாஜக தேசிய செயலாளர் அருண் சுக் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், SIR ஒருங்கிணைப்பாளர் அண்ணாமலை மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, தேர்தல் ஆணையம் நடுநிலையான அமைப்பாக செயல்படுவதாகவும், ஆனால் தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணிகளில் பி.எல்.ஓக்கள் எனப்படும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் நடுநிலையுடன் செயல்படுவது இல்லை என சாடினார்.
மேலும் 18 வயதை அடைந்த முதல் தலைமுறை வாக்காளர்களை கவனத்துடன் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்றும், தவறான வாக்காளர்களை நீக்குவதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் பாஜக பூத் ஏஜெண்டுகளுக்கு அண்ணாமலை அறிவுறுத்தினார்.
மேலும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானதும் பாஜக முகவர்கள் அதனை கண்ணும் கருத்துமாக ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அண்ணாமலை அறிவுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: இன்னும் அஞ்சு மாசம் தான் முதல்வரே! இனியும் பொருத்துக்க முடியாது… பூந்து விளாசிய அண்ணாமலை…!