×
 

தொகுதிக்கு ரூ.20 கோடி... இதை குறிச்சு வச்சிக்கோங்க ஸ்டாலின்... திமுகவை எச்சரித்த நயினார் நாகேந்திரன்...! 

பிரதமர் மோடி இதுவரை தமிழகத்திற்கு 14 லட்சத்து 83 ஆயிரம் கோடி ரூபாயை கொடுத்திருக்கிறார்.

வேலூரில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் பொதுக்கூட்டம் மண்டி வீதியில் நடைபெற்றது. இதில் பாஜகவின் மாநில தலைவர் சட்டமன்ற உறுப்பினருமான நயினார் நாகேந்திரன் பங்கேற்று சிறப்புரையாற்றினார். 

அப்போது பேசிய அவர், எங்களது கூட்டணி மக்களுடைய கூட்டணி,  உங்களது கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி என திமுகவை வெளுத்து வாங்கினார். வருகின்ற காலங்களில் 200 தொகுதிகள் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும். அதிமுக, பாஜக கூட்டணி என்பது தமிழகம் ஆன்மீக பூமியாக இருக்க வேண்டும் என்பதற்காக பாரத பிரதமர் மோடி, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியால் உருவாக்கப்பட்ட அற்புதமான கூட்டணி என்றார். 

திருப்பரங்குன்றம் மலை முருகனுக்கு மட்டுமே சொந்தம் என இங்கிலாந்து நாட்டிலேயே தீர்ப்பு வந்திருக்கிறது. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டது போல், 10 பேர் சேர்ந்து திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றி இருந்தால் எந்த பிரச்சனையும் ஏற்பட்டிருக்காது.  வாக்கு அரசியலுக்காக மட்டுமே தமிழக முதலமைச்சர் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவதை எதிர்க்கிறார் என்றார்.  திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருப்பது தீபத்தூண் இல்லை, எல்லைக்கல் என திமுக எம்.பி. கனிமொழி சொன்னார்கள். எல்லைக்கல் என்றால் 4 இடங்களில் இருக்கும்.  ஆனால் தீபத்தூண் ஆள் உயரத்திற்கு மேல் இருக்கிறது. இப்போது அதனை சமணர்கள் கல் என்கிறார்கள். திமுக குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே இப்படி பேசி வருகிறார்கள், வேறு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றார். 

இதையும் படிங்க: பள்ளிக் கல்வித் துறை சீர்கேட்டால் தான் மாணவன் மரணம்... பாஜக செய்தித் தொடர்பாளர் குற்றச்சாட்டு...!

பிரதமர் மோடி இதுவரை தமிழகத்திற்கு 14 லட்சத்து 83 ஆயிரம் கோடி ரூபாயை கொடுத்திருக்கிறார். 44,000 ஆயிரம் விவசாயிகளுக்கு 200 கோடி வழங்கப்பட்டுள்ளது. காட்பாடி ரயில் நிலையத்தை மேம்படுத்த 350 கோடி ஒதுக்கீடு. ராணிப்பேட்டையில் உள்ள பாலங்களை யார் கொடுத்தது?. பாரத பிரதமர் மோடி கொடுத்தது. முன்பெல்லாம் வேலூர் டு சென்னை செல்ல 5 மணி நேரமாகும். இப்போது 2 மணி நேரத்தில் போய்விடலாம். யார் போட்ட ரோடு? பாரத பிரதமர் நரேந்திர மோடி போட்ட ரோடு. அதில் தான் இப்போது திமுகவினர் போகிறார்கள்.  மத்திய அரசுடைய பணத்தில்  சென்னையிலிருந்து 12 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகிறது. 

பொங்கலுக்கு ரூ.5000 தருவார்கள். கடந்த முறை கஜானாவில் பணமில்லாததால் ரூ.5000 ரூபாய் தரவில்லை. இன்றைக்கு 8 லட்சம் கோடி ரூபாய் கடன் வைத்திருக்கிறார்கள்.  இப்படி மோசமான சூழ்நிலையில் தமிழகம் போய்க்கொண்டிருக்கிறது.  காட்பாடில் மட்டும் 15,000 வாக்குகளை கண்டுபிடிக்க முடியவில்லை. 10 ஆயிரம் பேர் இறந்துவிட்டார்கள். 2002ம் ஆண்டு இறந்தவர்கள் இன்னும் வாக்காளர் பட்டியில் உள்ளனர். அதனை நீக்குவதே எஸ்.ஐ.ஆர். பணியின் முக்கிய நோக்கம். 

ஓட்டுக்கு ரூ.2000, ரூ.3000 தருவோம் என்கிறார்கள். ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் ரூ.20 கோடியை திமுகவினர் பதுக்கி வைத்திருக்கிறார்கள். யார் வீட்டில் பதுக்கி வைத்திருக்கிறார்கள் என்பது எங்களுக்கு தெரியும். தகுந்த நேரம் வரும்போது அனைத்தும் நிச்சயமாக பறிமுதல் செய்யப்படும் எனத் தெரிவித்தார். 

இதையும் படிங்க: குனிஞ்சு கும்பிடு போட எதுக்கு அதிமுக பெயர்? நான் கேட்கலப்பா... அவங்கதான்..! முதல்வர் ஸ்டாலின் விளாசல்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share