×
 

"ஒரு கவுன்சிலர் கூட இல்ல... பணத்தை வைத்து ஆட்சியை பிடிக்க நினைப்பா?" - ஆதவை பொளந்தெடுத்த நயினார் நாகேந்திரன்...!

ஆதவ்அர்ஜுனா பணத்தை வைத்து ஆட்சியைப் பிடித்துவிடலாம் என்று நினைக்கிறாரோ என்பது தெரியவில்லை. ஒரு கவுன்சிலர் கூட அங்கு இல்லை

த.வெ.கவில் ஒரு கவுன்சிலர் கூட ஆகவில்லை - பணத்தை வைத்து ஆட்சியைப் பிடித்து விடலாம் என்று நினைக்கிறாரோ ஆதவ்அர்ஜுனா - விந்தையிலும் விந்தையாக உள்ளது - பட்டுக்கோட்டையில் இன்று மாலை செய்தியாளர்கள் சந்திப்பில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் த.வெ.கவிற்கு பதிலடி

தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம் நிகழ்ச்சிக்காக பட்டுக்கோட்டைக்கு வந்த பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த ஆதவ்அர்ஜுனா  தவெக விற்கும், திமுக விற்கும் இடையேதான் போட்டி என்கிறார் என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, பதிலளித்த நயினார் நாகேந்திரன், இது விந்தையிலும் விந்தையான விஷயம். ஒரு கவுன்சிலர் கூட ஆகவில்லை.

ஆதவ்அர்ஜுனா பணத்தை வைத்து ஆட்சியைப் பிடித்துவிடலாம் என்று நினைக்கிறாரோ என்பது தெரியவில்லை. ஒரு கவுன்சிலர் கூட அங்கு இல்லை. தேர்தல் வருவதால் கூட்டத்தை கூட்டி விடலாம். ஆட்சிக்கு வரனும். மக்களின் நன்மதிப்பை பெறணும். எம்.எல்.ஏக்கள் வரனும். பிஜேபியில் மொத்தம் 300 எம்.பிக்கள் உள்ளனர். 1,200 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். உலகத்திலேயே ஒரு மிகப்பெரிய கட்சி பிஜேபி. ஆனால் அந்த கட்சி என்று இரு கையையும் விரித்தார்.

இதையும் படிங்க: உண்டியலுக்கும் பாதுகாப்பு இல்ல... உயிருக்கும் பாதுகாப்பு இல்ல... முதல்வர் ஸ்டாலினை விமர்சித்த நயினார்..!

இதையும் படிங்க: "செங்கோட்டையனை இயக்கும் பாஜக" - நயினாரை சீண்டும் திமுக அமைச்சர் ...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share