×
 

“இன்னும் கவுன்சிலர் கூட ஆகல... அவரெல்லாம் எங்களுக்கு ஒரு எதிரியா?” - விஜயை பொளந்தெடுத்த நயினார்...!

யார் சுற்றப்பயணம் செய்தாலும் தேசிய ஜனநாயக கூட்டணியை ஒன்றும் செய்ய முடியாது என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கருத்து

திருப்பூர் பாளையக்காடு பகுதியில் பாஜக மாவட்ட துணை தலைவர் கார்த்திக் ஏற்பாட்டில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டு, 500 பெண்களுக்கு சேலை, மஞ்சள் குங்குமம் வழங்கும் நிகழ்வில் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பங்கேற்று பெண்களுக்கு ,சேலை குங்குமம் வழங்கினார்.

இந்து மதத்தை பொறுத்து நம்முடைய தந்தையாக சிவன் பார்வதியை வணங்கினால் கூட முழு முதல்கடவுலாக விநாயகரை வணங்குகிறோம். தென் மாநிலங்களில் தமிழ்நாட்டில் சிறப்பாக கொண்டாடி வருகிறோம்.

பல்வேறு நாடுகளுக்கு சென்று முதலீடு கொண்டு வநத்தாத சொல்கிறார்‌. இதுவரை எந்த முதலீடும் வந்ததாக தெரியவில்லை தமிழக முதல்வர் வெளிநாடு சென்று முதலீடு பெற்ற விவரங்களை வெள்ளை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும். இது வெறும் கண்துடைப்பாக உள்ளது.

இதையும் படிங்க: வைரலான பேனர்.. “இன்னொரு முறை இப்படி நடக்கக்கூடாது”.. பாஜகவினரை வெளுத்து வாங்கிய நயினார் நாகேந்திரன்...!

ஏற்றுமதி கொள்கையை வரையறுக்க வேண்டும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை .   எந்த அடிப்படையில்  மாற்றம் செய்ய வேண்டும் என  அவர் சொல்ல வேண்டும். ஏற்றுமதி வரி விதிப்பு என்பது சர்வதேச பிரச்சினை. டிரம்ப் விதித்த வரியில்  அவர்களுக்கும் பாதிப்பு உள்ளது. நமக்கும் பாதிப்பு உள்ளது. இதை கண்டு பயப்பட முடியாது.  திருப்பூர் ஏற்றுமதியாளர்களுக்கு பாதிப்பு இருக்கிறது. இது குறித்து ஏற்றுமதியாளர்களை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வேலை நிறுத்தாத அளவுக்கு பாதுகாப்பு வழங்கப்படும் என்று சொல்லி இருக்கிறார். 

அந்நிய நாடு மூலம் நம் நாட்டுக்கு பிரச்சினை வரும்போது எதிர்க்கட்சிகள் ஆளுங்கட்சியுடன் சேர்ந்து உதவி செய்ய வேண்டும் அரசியல் குளிர்காய கூடாது.  ராகுல் காந்தியின் திறமை அவ்வளவு தான். மனுக்கள் ஆற்றில் வீசப்பட்டது குறித்த கேள்விக்கு, முதல்வர் மனுக்கள்  வாங்கினால் அது குப்பையில் போடப்படுவது தான் திராவிட மாடல். 

பிரேசில் நாட்டிற்கு விதிக்கப்பட்ட வரி விதிப்பை அரசு ஏற்கும் என ஏற்றுமதியாளர்கள் தெரிவித்ததாக செய்தியாளர் கேட்ட போது, கேள்வி நன்றாக உள்ளது ஆனால் உங்களுக்கும் உணர்வு வேண்டும். இதே ஏற்றுமதியாளர்கள் நிர்மலா சீதாராமனை சந்தித்ததை ஏன் கூறவில்லை என தெரியவில்லை .நீங்கள் கேட்க வேண்டும். பருத்திக்கு ஜனவரி வரை இறக்குமதி வரியை ரத்து செய்துள்ளார்கள். 

யாருடைய சுற்றுப்பயணமும் தேசிய ஜனநாயக கூட்டணியை ஒன்றும் செய்ய முடியாது இன்று நிறைய பேர் கட்சி ஆரம்பிக்கலாம் ஆனால்  கவுன்சிலர் எம்.எல். ஏ கூட ஆகாமல் அவரை தோற்கடித்து விடுவேன் இவரை எதிரி என கூறுவது ஒப்பு இல்லாத  வார்த்தையாக தான் கருத முடியும், பாஜகவில் 330 எம்பியை கொண்டு  மிகப்பெரிய தலைவராக பிரதமர் மோடி உள்ளார்.  1300க்கும் மேல் எம்.எல்.ஏ உள்ளனர்.  ஒரு மாநாடு போட்டு விட்டு எனக்கு எதிரி என சொல்வதை எப்படி ஏற்க முடியும். கூட்டணி க்கு இன்னும் 8 மாதம் உள்ளது நிறைய கட்சிகள் வந்து சேரும்.  

கோவையை விட திருப்பூரில் 16 சதவீதம் அதிகம் சொத்துவரி உயர்வு 300 சதவீதத்துக்கும் அதிகம். முதல்வர் என்ன செய்திருக்க வேணும். ஏற்றுமதியாளர்களுக்கு சொத்து வரி கிடையாது, மின் கட்டணம் குறைக்க வேண்டும். அதை விடுத்து  போராட்டம் நடத்தப்போவதாக சொல்கிறார் என்றார். 
 

இதையும் படிங்க: வெற்றி வியூகம் வகுக்க நெல்லை வரும் அமித் ஷா!! சூடுபிடிக்கும் தமிழக தேர்தல் களம்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share