×
 

ஜெய்ஹிந்த் ஶ்ரீமான்..? ஜெய் ஶ்ரீராம்..? ஒரு அமைச்சர் இப்படியா பேசுறது..! வன்னியரசை பந்தாடிய நயினார்.!

அமைச்சர் வன்னியரசை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

இந்து மதத்தின் மீதுள்ள வெறுப்பு, உங்கள் ஐம்புலன்களையும் ஒடுக்கிவிட்டதா என அமைச்சர் வன்னியரசுக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பினார். சமீபத்தில் நீங்கள் கலந்து கொண்ட பள்ளி விழாவில் “ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்” என NCC மாணவர்கள் உங்களுக்கு வரவேற்பளித்ததை, “ஜெய் ஸ்ரீராம்” என தவறாகப் புரிந்து கொண்டு, பள்ளி மேடையிலேயே பாஜகவை வாய்க்கு வந்தபடி வசைபாடியிருப்பது இந்து மதத்தின் மீதும் பாஜகவின் மீதும் நீங்கள் கொண்டுள்ள அளவுகடந்த வெறுப்பின் வெளிப்பாடாகத்தான் தெரிகிறது என்று தெரிவித்துள்ளார்.

பள்ளிகளில் அரசியல் பேசக் கூடாது என்ற அடிப்படை தெரியாமல், பள்ளி மாணவர்களிடையே இவ்வாறான வெறுப்பு பிரச்சாரத்தை முன்னெடுத்த உங்கள் அரசியல் மாண்பற்ற செயல் கடும் கண்டனத்திற்குரியது எனவும் கூறியுள்ளார். காலங்காலமாக இந்திய இராணுவப் படைகளிலும், சீருடைப் பணிகளிலும் மூத்தவர்களை “ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்” என விளிப்பது தான் மரபு என நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டார்.

அதுமட்டுமன்றி, பல பத்தாண்டுகளாக இந்திய இராணுவத்தின் ஒவ்வொரு படைப்பிரிவிலும், ஒவ்வொரு இந்துக் கடவுளின் பெயரைக் கூறி கோஷங்களை எழுப்புவதும் வழக்கமான ஒன்று தான் என்றார். எனவே, இங்கு யாரும் எதையும் புதிதாக திணிக்கவில்லை என்பதை தேசிய மாணவர் படைக்கும், சாரணர் படைக்கும் வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னி அரசு புரிந்து கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.

இதையும் படிங்க: அதிதீவிர ஆர்.எஸ்.எஸ் பின்புலம்.! யார் இந்த பிரகலாத் ஜோஷி? புதிய கல்வி அமைச்சரின் முழு பின்னணி தெரியுமா.?

மேலும், சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் போதிக்க வேண்டிய பள்ளி மாணவர்களிடையே, தனது அமைச்சர்கள் இதுபோன்ற இந்து மத வெறுப்பு கருத்துக்களை பரப்புவதை முதல்வர் விஜய் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். 

இதையும் படிங்க: "போராட்டம் வாபஸ்"..! உறுதியளித்த மத்திய அரசு... கரப்பான் பூச்சி ஜனதா தளம் சமரசம்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share