×
 

“அவரு வர்ல, உங்களுக்கு எதுவுமே இல்ல” ... டிடிவி-க்கு ஸ்ட்ரிக்ட்டாக உத்தரவு போட்ட பாஜக தலைமை... இபிஎஸுக்கு எதிராக அசைன்மெண்ட்...!

ஓ.பன்னீர்செல்வத்தை கூட்டணிக்குள் விடாதீங்க, நானே தென்மாவட்ட மக்களை சரி கட்டிக்குறேன் என எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறாராம்.

தேசிய ஜனநாய கூட்டணியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் விலகியது வர உள்ள சட்டமன்ற தேர்தலில் சரிவை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது. குறிப்பாக தென் மாவட்டங்களில் ஏற்கனவே ஓபிஎஸ் சமூகத்தைச் சார்ந்தவர்கள் அதிமுகவில் இருந்து அவரை துரத்திவிட்டதாகவும், வஞ்சித்துவிட்டதாகவும் எடப்பாடி பழனிசாமி மீது கடுப்பில் உள்ளனர். இப்போது பாஜக, இபிஎஸ் பேச்சை கேட்டுக்கொண்டு தான் தன்னைக் கண்டுகொள்ளவில்லை என ஓபிஎஸ் கூட்டணியை விட்டு விலகியதால், பாஜக மீது அந்த கோபம் திரும்பியுள்ளது. 

இதனால் வர உள்ள தேர்தலில் தென் மாவட்டங்களில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மிகப்பெரிய சரிவு ஏற்படக்கூடும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர். ஆனாலும் ஓ.பன்னீர்செல்வத்தை கூட்டணிக்குள் விடாதீங்க, நானே தென்மாவட்ட மக்களை சரி கட்டிக்குறேன் என எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறாராம். அதுமட்டுமில்ல ஓபிஎஸ் இல்லாமலேயே நம்மால் ஜெயிக்க முடியும் என தனது சுற்றுப்பயண ரிப்போர்ட்டை எல்லாம் எடுத்து காண்பித்து இருக்கிறார். 

மேலும் அதிமுகவில் ஜெயலலிதாவால் முதல்வராக்கப்பட்ட ஒருவர், திமுக தலைவரை அவரது வீட்டுக்கே போய் நேரில் சந்தித்ததால் தொண்டர்கள் எல்லாம் கொதிப்படைச்சி போயிருக்காங்க. இப்ப அவரைக் கூட்டணிக்குள்ள கொண்டு வந்தால் எங்களுக்கு ஒத்து வராது என்றெல்லாம் எடப்பாடி பழனிசாமி விடாப்பிடியாக சொல்லியிருக்காரு. இபிஎஸ் பேச்சைக் கேட்டால் தேர்தலில் மண்ணைக் கவ்வ வேண்டியது தான் என முடிவெடுத்த பாஜக தலைமை, ஓபிஎஸை எப்படியாவது கூட்டணிக்குள் கொண்டு வர டிடிவி தினகரனை தூது அனுப்ப திட்டமிட்டுள்ளார்களாம். 

இதையும் படிங்க: இறங்கி வந்த பாஜக... STRICT ஆக NO சொன்ன ஓபிஎஸ்! காரணம் என்ன சொன்னாரு தெரியுமா?

ஒரே சமூகம் என்பது மட்டுமல்ல, ஓபிஎஸுக்கும் டிடிவி தினகரனுக்கும் இடையே நல்ல புரிதல் உள்ளது. டிடிவி சொன்னால் ஓபிஎஸ் கேட்பார் என்ற நம்பிக்கையில் அவருக்கு பாஜக தலைமை புது அசைன்மெண்ட் ஒன்றை கொடுத்திருக்கிறார்கள். அதன்படி, “ஓ.பன்னீர்செல்வத்தை எப்படியாவது சமாதானப்படுத்தி நம்ப கூட்டணிக்குள்ள மறுபடியும் கொண்டு வந்திடுங்க, இல்லைன்னா உங்களுக்கு அரசியல் எதிர்காலமே இல்லாமல் போய்விடும்” என கட் அண்ட் கறாராக உத்தரவிட்டுள்ளார்களாம். 

இதையும் படிங்க: ஓபிஎஸுக்காக களமிறங்கும் அண்ணாமலை; டெல்லியை நோக்கி மாஸ்டர் பிளான் - இபிஎஸ், நயினாருக்கு காத்திருக்கும் ஷாக்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share