#BREAKING: அனல் தெறிக்கும் "புதுவை" அரசியல் களம்… பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு..!!
புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது.
புதுச்சேரியில் இந்திய தேர்தல் ஆணையம் மார்ச் 15-ஆம் தேதி அறிவித்தது. தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறும். வேட்புமனு தாக்கல் தொடங்கிய தேதி மார்ச் 16, கடைசி தேதி மார்ச் 23, வேட்புமனு ஆய்வு மார்ச் 24, வேட்புமனு வாபஸ் இழுப்பதற்கான கடைசி நாள் மார்ச் 26. வாக்குப்பதிவு ஏப்ரல் 9, 2026 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் மே 4 அன்று அறிவிக்கப்படும் என்றும் இதே நாளில் தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலத் தேர்தல் முடிவுகளும் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் என்டிஏ கூட்டணியில் என் ஆர் காங்கிரஸ் 16 இடத்திலும், பாஜக 10 இடத்திலும் போட்டியிடுகிறது. அதிமுக இரண்டு இடங்களிலும் லட்சிய ஜனநாயக கட்சி இரண்டு தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. இந்த நிலையில், புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்கான ஒன்பது பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் பாஜக அறிவித்துள்ளது. முதல் கட்டமாக ஒன்பது தொகுதிகளுக்கான வேட்பாளர்களை கொண்ட பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது.
மன்னாடிபட்டு சட்டமன்ற தொகுதியில் நமசிவாயம் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஊசுடு தொகுதியில் தீப்பாய்ந்தான் களம் காண்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. காலாப்பேட்டை சட்டமன்ற தொகுதியில் கல்யாணசுந்தரம் போட்டியிடுகிறார். ராஜ் பவன் தொகுதியில் ராமலிங்கம் வேட்பாளராக களம் காண்கிறார். முதலியார் பேட்டை தொகுதியில் ஜான் குமார் போட்டியிடுவதாக பாஜக அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: தொகுதி பங்கீட்டில் சிக்கல்... உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் TTV தினகரன் சந்திப்பு...!
மணவேலி சட்டமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளராக செல்வம் களம் காண்கிறார். திருநள்ளாறு தொகுதியில் ராஜசேகரனும், நிரவிப்பட்டினம் தொகுதியில் மீனாட்சி சுந்தரமும் போட்டுவிடுகின்றனர். மேலும் மாஹே தொகுதியில் தினேஷன் போட்டியிடுவதாக பாஜக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: டெல்லிக்கு பறந்த TTV, அன்புமணி..! பியூஷ் கோயலின் சென்னை பயணம் திடீர் ரத்து...!!