விஜய் கூடவே இருக்குற திருட்டு பையன் தான் அதை செஞ்சிருக்கான்: சரத்குமார் ஆவேசம்...!
விஜய் கூடவே இருக்கும் திருட்டு பையன் தான் ஜனநாயகன் படத்தை வெளியிட்டு இருக்கான்: சரத்குமார் காட்டம்
தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக சென்னை பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சியின் பொருளாளர் திலகபாமாவை ஆதரித்து பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரும், நடிகருமான சரத்குமார் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பாஜகவின் பிரச்சார வாகனத்தில் இருவரும் ஒன்றாக நின்றபடி எம்.கே.பி நகர், சின்னாண்டி மடம் புதிய பாலம், பி.வி.ரௌண்டான உள்ளிட்ட இடங்களில் வாக்கு சேகரித்தனர்.
அப்போது மக்களிடையே பேசிய சரத்குமார், தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய்-யை பற்றி ஏன் விமர்சிக்க தயங்குகிறீர்கள், இரு கட்சிகளுக்குள்ளும் தொடர்பு இருக்கிறதா? என்று செய்தியாளர்கள் என்னிடம் கேட்கின்றனர். யாரிடமும் கள்ள தொடர்பு வைத்துக்கொள்வது பாஜகவின் வழக்கம் இல்லை. அவர் யாருடன் தொடர்பு வைத்திருக்கிறார் என்று எனக்கு தெரியாது.
எந்த கொள்கையும், கோட்பாடும் இல்லாதவர் விஜய். 41 பேர் இறந்தபோது அவர்களது வீட்டிற்கு சென்று துக்கம் விசாரிக்காமல், தனது இடத்திற்கு வரவழைத்து துக்கம் விசாரித்த உலகில் ஒரே தலைவர் தவெக தலைவர் விஜய் தான்.
இதையும் படிங்க: கழுத்தறுத்த பாஜக! கம்பி நீட்ட தயாராகும் சரத்குமார்! மீண்டும் உதயமாகிறதா சமத்துவ மக்கள் கட்சி?!
தலைவன் என்பவன் எந்த ஒரு சோதனை காலம் வந்தாலும் அருகில் இருந்து கவனித்து கொள்ள வேண்டும். ஜனநாயகன் படம் ரிலீஸ் ஆனதற்கு மத்திய அரசை குற்றம் சொல்கிறார், அவருடன் இருக்கும் ஒரு திருட்டு பையன் தான் அதனை ரிலீஸ் செய்திருக்கிறான்.
அனைத்திலும் அரசியல் காண வேண்டும் என்று பொய் பிரச்சாரம் செய்து வரும் தவெக அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழக்க செய்ய வேண்டும், நாட்டுக்கு அப்போது தான் நல்லவர்கள் வருவார்கள், இளைஞர்களை அவர் திசை திருப்ப வேண்டாம் என அவர் பேசினார்.
பிரசாரத்தின் போது ஏன் லீவு விடுகிறார் என அவரிடம் தான் கேட்க வேண்டும். முதல் முறையாக ஊர் ஊராக சென்று மக்களை சந்திப்பதால் சோர்வடைந்திருக்கலாம். மக்களுக்கு என்ன செய்யப்போகிறார்கள் என்பதை சொல்லாமலேயே வாக்கு சேகரிக்க நினைக்கிறார் என சரமாரியாக விமர்சித்தார்.
அதற்கு முன்னதாக பிரசார வாகனத்தில் பொதுமக்களிடையே உரையாற்றிய சரத்குமார்: “ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்” என்பது போல் கொடுங்கையூர் பகுதியில் டாஸ்மாக் கடை திறந்தவுடன், அதனையே மூடியே ஆகவேண்டும் என காவல்துறையிடம் போராடி தக்க நடவடிக்கை எடுக்க வைத்துள்ளார். தமிழகத்தில் போதையும், மதுவும் இளைஞர்களை சீரழித்து வருகிறது. 2025ம் ஆண்டு கருத்துக்கணிப்பின் படி அதிகமான இளைஞர்களைக் கொண்ட நாடு இந்தியா. அப்படிப்பட்ட இளைஞர்களை வழிநடத்த வேண்டும் என்றால், தரமான கல்வி, கல்விக்கு ஏற்ற வேலை, வேலைக்கு ஏற்ற ஊதியம் வழங்க வேண்டும். இதெல்லாம் இருந்தால் இளைஞர்களின் எண்ணங்கள் சிறப்பாக இருக்கும், அப்போது தங்களது குடும்பத்தை மட்டுமல்ல மாநிலத்தையும் தேசத்தையும் முன்னேற்றுவார்கள் என்றார்.
இதையும் படிங்க: பெரம்பூரில் தவெகவினரை ஓட, ஓட விரட்டிய திலகபாமா... வாண்டடாக வம்பிழுத்த விசிலடிச்சான் குஞ்சுகளுக்கு செம்ம ஷாக்...!