அறிவாலயம் விரைவில் அழியும்!!! இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது! நாகேந்திரன் வார்னிங்!
ஈரோட்டில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி குறித்து திமுக வர்த்தகர் அணி செயலாளர் காசிமுத்து மாணிக்கம் கொச்சையாக பேசியது கண்டிக்கத்தக்கது. அரசியல் நாகரிகமற்ற அறிவாலயம் விரைவில் அழியும் என நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
தமிழக அரசியல் களம் சூடுபிடித்து வரும் நிலையில், ஈரோடு மாவட்டத்தில் நடந்த திமுக நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி குறித்து திமுக மாநில வர்த்தகர் அணி செயலாளர் காசிமுத்து மாணிக்கம் கொச்சையாக பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில், “அரசியல் நாகரிகமற்ற அறிவாலயம் விரைவில் அழியும்!” என்று கூறியுள்ளார்.
மேலும், “தேசத்தின் உயரிய பதவியில் உள்ள பிரதமர் நரேந்திர மோடியை பொது மேடையில் மலினமாக பேசியது வன்மையாக கண்டிக்கத்தக்கது. மேடையில் இருப்பவர்களும் சுற்றியிருப்பவர்களும் கைத்தட்டி சிரித்து ரசித்தது திமுகவின் குரூர போக்கை வெளிப்படுத்துகிறது.
இதையும் படிங்க: பார்த்தால் வெட்டுவேன், பேசினால் குத்துவேன்! கொலைவெறியுடன் திரியும் சிறார்கள்!!! நயினார் குற்றச்சாட்டு!
பிரதமரை இழிவுபடுத்தியதற்கு காசிமுத்து மாணிக்கம் உடனடியாக பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். அரசியல் காழ்ப்புணர்ச்சியால் உலகமே போற்றும் தலைவரை கொச்சையாக தூற்றும் அறிவாலயம் மொத்தமாக அழியும் நாள் தூரமில்லை!” என்று குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் நாகரிகமற்ற அறிவாலயம் விரைவில் அழியும்!
— Nainar Nagenthran (@NainarBJP) January 27, 2026
ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு கட்சி நிகழ்வில் நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. @narendramodi அவர்கள் குறித்து திமுக மாநில வர்த்தகர் அணிச் செயலாளர் திரு. காசி முத்து மாணிக்கம் ஆட்சேபிக்கத்தக்க வகையில் கொச்சையாகப் பேசியிருப்பது…
பிரதமர் மோடியை தகாத வார்த்தைகளால் தூற்றுவது, கொலை மிரட்டல் விடுப்பது வரை திமுக தொடர்ந்து அரசியல் மாண்பை மீறி வருவதாக நயினார் நாகேந்திரன் சாடியுள்ளார். இனியும் இதை பொறுத்துக்கொள்ள முடியாது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. திமுக தரப்பில் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ விளக்கமும் வரவில்லை. 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு இது போன்ற சர்ச்சைகள் கூட்டணி கட்சிகளுக்கு இடையே பதற்றத்தை ஏற்படுத்தலாம் என்று அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
இதையும் படிங்க: 7 வயது சிறுமி வன்கொடுமை! நீதியின் நெருப்பில் திமுக சுட்டுப் பொசுக்கப்படும்!! நயினார் ஆவேசம்!!