×
 

அமலாக்கத் துறை பேரைக் கேட்டாலே திமுக அதிருது.. நயினார் நாகேந்திரன் மரண கலாய்.!!

அமலாக்கத் துறை வார்த்தையைக் கேட்டாலே திமுகவில் யாருக்கும் தூக்கம் வருவதில்லை என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

அமலாக்கத் துறை வார்த்தையைக் கேட்டாலே திமுகவில் யாருக்கும் தூக்கம் வருவதில்லை என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

சென்னையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "தமிழகத்தில் அனைத்து மாநகராட்சி, நகராட்சி பகுதிகளிலும் வரி விதிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். கிராமபுறப் பகுதிகளில் கூட போதைப் பொருள் விற்பனை அதிகரித்துவிட்டது. கிராமங்களுக்கு இடையே மோதல்கள், மாணவர்களுக்கு இடையே தகராறு சம்பவங்கள் அதிகம் நடைபெறுகின்றன. இதை தமிழக அரசு தடுத்து நிறுத்தாமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது.

டாஸ்மாக் கடைகளை இரவு 10 மணிக்கு மேல் பூட்டிவிடுகிறார்கள். அதன் பிறகு அதிக விலைக்கு சட்ட விரோதமாக கள்ளச் சந்தையில் மது விற்பனை நடைபெற்று வருகிறது. அமலாக்கத் துறை என்கிற வார்த்தையைக் கேட்டாலே திமுகவில் யாருக்கும் தூக்கம் வருவதில்லை. அமலாக்கத் துறை என்பது தனி அமைப்பு. தேவை இல்லாமல் யார் வீட்டிலும் சோதனை நடத்த முடியாது. எங்கு தவறு நடந்திருக்கிறதோ அங்குதான் அவர்கள் சோதனை நடத்துவார்கள்.
கள்ளிலும் போதை இருக்கத்தான் செய்கிறது. ஆனாலும், அதை குடிப்பதால் உடலுக்குதான் நல்லது.



மாநில அரசுக்குக் கொடுக்க வேண்டிய நிதியை மத்திய அரசு வழங்கி வருகிறது. ஆனால், தமிழக அரசு எதிர்பார்த்து சில நிதிகளை கேட்கிறது. உச்ச நீதிமன்றத்துக்குச் சென்று ஏதோ ஒரு உத்தரவை பெற்று வந்ததால், தமிழக அரசு தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தையே நாடி வருகிறது. உச்ச நீதிமன்றம் என்ன சொல்கிறதோ சொல்லட்டும். ஆனால், மத்திய அரசுதானே நிதி கொடுக்க வேண்டும். மாநில அரசு மத்திய அரசுடன் சுமூகமான உறவு வைத்துக்கொள்ள வேண்டும். அப்படி தேவையான நிதியைப் பெற்று மக்களுக்கு கொடுப்பது மக்களுக்கு செய்யக்கூடிய நல்ல காரியமாக இருக்கும்.

இதையும் படிங்க: பேசாமல் கமலாலயத்துக்குள் அதிமுக ஆபிஸ் போட்டுக்குங்க..இபிஎஸ்ஸை லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய ரகுபதி.!

ஆனால், மாநில அரசு எதற்கெடுத்தாலும் எதிர்ப்பு காட்டிக் கொண்டே இருக்கிறார்கள். பிரதமர் வந்தாலும் அல்லது மத்திய அமைச்சர்கள் யார் வந்தாலும் ஒருவரும் வரவேற்க கூட செல்வதில்லை.
வரி பங்கீட்டில் தமிழகத்துக்கு ஒரு நீதி உத்தரபிரதேசத்துக்கு ஒரு நீதி என்பதெல்லாம் இல்லை. மற்ற மாநிலங்களுக்கு எவ்வாறு நிதி பங்கீட்டு வழங்கப்படுகிறதோ அதுபோலதான் தமிழகத்துக்கும் வழங்கப்படுகிறது" என்று நயினார் நாகேந்திரன் கூறினார்.

இதையும் படிங்க: டாஸ்மாக் முறைகேட்டில் இவுங்களுக்கெல்லாம் தொடர்பு... பகீர் கிளப்பும் ஹெச். ராஜா.!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share