×
 

திமுகவினரே திமுகவை தோற்கடிப்பார்கள்!! திருப்பரங்குன்றம் விவகாரம்! பாஜக கடும் விமர்சனம்!

தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ் பிரசாத். ‛சனாதன தர்மத்திற்கு எதிரான திமுகவின் போக்குக்கு திமுகவினரே திமுகவை தோற்கடிப்பார்கள் என தெரிவித்துள்ளார்

சென்னை: திருப்பரங்குன்றம் கோயில் தீப விவகாரத்தில் திமுக அரசு சனாதன தர்மத்துக்கு எதிரான போக்கை கடைப்பிடிப்பதாக தமிழக பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் கடும் விமர்சனம் செய்துள்ளார். திமுகவினரே திமுகவை தோற்கடிப்பார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற தனி நீதிபதி சுவாமிநாதன் உத்தரவிட்டதை எதிர்த்து கோயில் செயல் அலுவலரும் மாவட்ட ஆட்சியரும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன் மற்றும் சி.வி. கார்த்திகேயன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

விசாரணையின்போது தமிழக அரசு தரப்பில், கோயில் அருகே தர்கா இருப்பதால் கோயில் நிர்வாகம் அனுமதி வழங்க வேண்டும் என்றும், மலையில் தீபத்தூண் இருப்பதற்கு ஆதாரம் இல்லை என்றும் வாதிட்டது. இது உண்மைக்கு மாறானது என்றும் வரலாற்றை திரித்து வாதிட்டது என்றும் பிரசாத் குற்றம்சாட்டினார்.

இதையும் படிங்க: திருப்பரங்குன்றம் தீபம்! அது சர்வே கல் அல்ல! சமணர் கல்! கோர்ட்டில் அந்தர் பல்டி அடித்த தமிழக அரசு!

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் என். ஜோதி, முருகனுக்கு இரண்டு மனைவிகள் இருந்தாலும் தீபம் ஒரு இடத்தில் மட்டுமே ஏற்ற வேண்டும் என்று கூறியது இந்து மதத்தை அவமதிக்கும் வகையில் உள்ளது என்று பிரசாத் தெரிவித்தார். மேலும், தூண்கள் இரவு வெளிச்சத்துக்காக மட்டுமே என்று ஆதாரமற்ற கருத்துகளை முன்வைத்தது என்றும் அவர் கூறினார்.

நீதிமன்றத்தில் போராடும் முருக பக்தர்களுக்கு ஆதரவாக தமிழக அரசு செயல்பட வேண்டும் என்று பிரசாத் வலியுறுத்தினார். ஆனால் அரசு சனாதன தர்மத்துக்கு எதிராக இந்து கடவுள்களை இழிவுபடுத்தும் வகையில் செயல்படுவது கண்டனத்துக்குரியது என்று அவர் கூறினார்.

வழக்கறிஞரின் கருத்துகளுக்கு அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு தார்மீகப் பொறுப்பேற்று மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பிரசாத் கோரினார். திமுக தலைவர்கள் தொடர்ந்து இந்து மதத்தை கொச்சைப்படுத்துவதால் தமிழக மக்கள் கொதித்துப் போயுள்ளனர் என்றும், வரும் தேர்தலில் திமுகவினரே திமுகவை தோற்கடிப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த விவகாரம் தமிழக அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: திருப்பரங்குன்றம் விவகாரம்... பாஜக எம். பி. பேச்சால் நாடாளுமன்றத்தில் சர்ச்சை..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share