பரபரப்பில் தலைநகரம்...!! - கலைஞர் இல்லத்தில் கருப்புக்கொடி... கோபாலபுரத்தில் குவிந்த கருப்பு படை...!
மறைந்த திமுக தலைவர் கலைஞர் இல்லத்தின் முன்பாக திமுகவினர் கருப்பு கொடி ஏற்றியும் கருப்பு கொடியை ஏந்தியும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மத்திய அரசினுடைய தொகுதி மறுவரையறை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் பொது இடங்கள், அலுவலகங்கள், வீடுகள் என அனைத்திலும் கருப்பு கொடி ஏற்றி எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று வீடியோ வெளியிட்டு தெரிவித்திருந்தார் அந்த வகையில் தமிழ்நாடு முழுவதும் இன்று கருப்புக்கொடி எதிர்ப்பு போராட்டமானது நடைபெற்று வருகிறது. திமுகவினுடைய கட்சி அலுவலகங்கள், கூட்டணி கட்சியினுடைய அலுவலகங்கள், வீடுகள் என அனைத்து இடங்களிலும் கருப்பு கொடி ஏற்றி எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி அண்ணா அறிவாலயம், முதலமைச்சரினுடைய இல்லம், துணை முதலமைச்சருடைய குறிஞ்சி இல்லம் உள்ளிட்ட இடங்களில் எல்லாம் கருப்பு கொடி ஏற்றப்பட்டு மத்திய அரசுக்கு தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
அந்த வரிசையில், சென்னை கோபாலபுரத்தில் இருக்கக்கூடிய முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியினுடைய இல்லத்தில் கருப்பு கொடி ஏற்றி போராட்டமானது நடைபெற்றது. இந்த கருப்பு கொடி ஏற்றிய போராட்டத்தில் கலைஞர் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியினுடைய மகள் செல்வி, ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதியினுடைய வேட்பாளர் எழிலன் உள்ளிட்டோர் வெளியில் வந்து கருப்பு கொடியை ஏற்றி இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
உயரட்டும் கருப்பு கொடி, தமிழ்நாடு வெல்லும், தமிழ்நாடு போராடும் உள்ளிட்ட கோஷங்களை முன்வைத்து இந்த போராட்டமானது நடைபெற்றது. இந்த போராட்டத்தை பொறுத்தவரைக்கும், நேற்று முதலமைச்சர் இந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளது போல, எங்களுடைய எதிர்ப்பை நீங்கள் உள்வாங்கி எங்களுக்கு உரிய பதிலை தர வேண்டும். இல்லை என்றால் பழைய திமுகவை நீங்கள் பார்க்க வேண்டும் என்று முதலமைச்சர் நேற்று இந்த காணொளியிலே சொல்லியிருந்தார். அந்த வகையிலே தான் இந்த மூன்று கோஷங்கள் உயரட்டும் கருப்பு கொடி தமிழ்நாடு வெல்லும் தமிழ்நாடு போராடும் என்ற கோஷங்களை முன்வைத்து பல்வேறு இடங்களில் திமுகவினர் அதனுடைய கூட்டணி கட்சியினர் கருப்பு கொடி போராட்டத்தை நடத்தி வருகிறார்கள்.
இதையும் படிங்க: கருணாநிதி பற்றி இனியும் பேசினால்... இபிஎஸை நேரடியாக எச்சரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...!
இதையும் படிங்க: தொடரும் தொகுதி மறு வரையறை பிரச்சனை..! சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி ஆதரவு..!!