×
 

தமிழகமே பரபரப்பு... ஒரே நேரத்தில் 3 அமைச்சர்கள் வீடுகளுக்கு பறந்த போலீஸ் படை...!

ஒரே நேரத்தில் 3 அமைச்சர்கள் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் உள்ள பாடகி சின்மயி வீட்டிற்கும் தொடர்ந்து திருச்சியில் உள்ள அமைச்சர்கள் நேரு, அன்பில் மகேஷ் உள்ளிட்டோர் இல்லத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக அமைச்சர்களான சேகர் பாபு மற்றும் கே.என்.நேரு அதேபோல் பள்ளி கல்வித்துறை அமைச்சரான அன்பில் மகேஷ் உள்ளிட்டோரது வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கக்கூடிய சம்பவமானது தற்போது நடைபெற்றிருக்கிறது.

டிஜிபி அலுவலகத்திற்கு வந்த மெயில் ஒன்றில் இவர்களது வீடுகளில் வெடிகுண்டு வைத்திருப்பதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. உடனடியாக சம்பந்தப்பட்ட போலீசார் அவர்களது வீடுகளுக்கு சென்று சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்ப கருவியுடன் சென்று வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக இந்த சோதனையில ஈடுபட்டு வருகின்றனர். 

இதையும் படிங்க: "வாக்காளர் பட்டியலில் வடமாநில தொழிலாளர்கள்"... திமுகவினருக்கு ஸ்ட்ரிக்ட் உத்தரவு போட்ட கே.என்.நேரு...!

திருச்சி தில்லை நகரில் உள்ள நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே என் நேரு வீடு மற்றும் அவருடைய அலுவலகத்திற்கும், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இல்லத்திற்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. அதனையடுத்து வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் அவர்கள் வீடுகளில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

அதேபோல் சென்னையில் இருக்கக்கூடிய பாடகி சின்மயி, பாஜக பிரமுகர் அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்டோரின் வீடுகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் மெயில் வந்திருக்கிறது. அதேபோன்று சம்பந்தப்பட்ட போலீசார் அவர்களது வீடுகளிலும் இந்த வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

நேற்று சென்னை காவல் ஆணையர் ஒரு தகவலை குறிப்பிட்டிருந்தார். கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து மொத்தம் 342 வெடிகுண்டு மிரட்டல் சம்பவமானது விடுக்கப்பட்டிருப்பதாகவும், இது தொடர்பான வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, கிட்டத்தட்ட அந்த குற்றவாளியை நெருங்கி விட்டதாகவும் தகவல்தெரிவித்திருந்தார். 

மேலும் அவர்கள் மெயில் அனுப்ப பயன்படுத்தும் ஒரே மாதிரியான வார்த்தைகள் மற்றும் பயன்படுத்தும் மெயில் முகவரி உள்ளிட்ட விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும், கிட்டத்தட்ட குற்றவாளி களை நெருங்கிவிட்டதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

 இது போன்ற வெடிகுண்டு மிரட்டல்களை தினமும் விடுக்கப்பவர்கள் விபிஎன் தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தான் தப்பித்து வருவதாகவும், அவர்களை கைது செய்யக்கூடிய பணியில் மும்முரமாக போலீசார் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது N.

இதையும் படிங்க: விஸ்வரூபம் எடுக்கும் பணிநியமன ஊழல்...!! அமலாக்கத்துறைக்கு போட்டியாக களமிறங்கும் தமிழக காவல்துறை... கே.என்.நேரு கொடுத்த லேட்டஸ்ட் அப்டேட்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share