நள்ளிரவில் பனையூருக்கு படையெடுத்த போலீஸ் படை... பதறிப்போன புஸ்ஸி ஆனந்த்... தவெக அலுவலகத்தில் இருந்து அவசர அவசரமாக வெளியேற்றம்...!
சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு முழுவதுமே கடந்த சில வாரங்களாக அரசு அலுவலகங்கள், பிரபலங்களின் வீடுகள், ரயில் நிலையங்கள், அரசியல் தலைவர்களின் வீடுகள் மற்றும் கட்சி அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுவது நீடித்து வருகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோரது வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. உடனடியாக அங்கு மோப்ப நாய்கள் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களுடன் குவிந்த போலீசார் தீவிர சோதனைக்குப் பிறகு வெடிகுண்டு மிரட்டல் வெறும் வதந்தி என்பதை கண்டறிந்தனர்.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு டிஜிபி அலுவலகத்திற்கு வந்த மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. உடனடியாக இந்த தகவலானது தாம்பரம் காவல் கட்டுப்பாட்டு அறை மூலம் தெரிவிக்கப்பட்டு, அடுத்த 30 நிமிடங்களிலேயே வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் மற்றும் தொழில்நுட்ப கருவியுடன் கானாத்தூர் காவல்துறையினர் பனையூர் விரைந்தனர்.
இதையும் படிங்க: நெருங்கும் SIR... அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க தவெகவுக்கு அழைப்பு...!
வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட செய்தியைக் கேள்விப்பட்டு தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் அங்கு வந்தனர். அப்போது வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்ததால் ஆனந்த் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பனையூர் அலுவலகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரத்திற்கு நடத்தப்பட்ட சோதனைக்குப் பிறகு, வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது புரளி என்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து தவெக அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: களமாடும் நேரம் இது! நவம்பர் 5ல் தவெக சிறப்பு பொதுக் குழு கூட்டம்... விஜய் அதிகாரப்பூர்வ அறிவிப்பு...!
 by
 by
                                    