Breaking News!! C.ஜோசப் விஜய் எனும் நான்!! ஆண்டவன் மீது ஆணை!! நேரு ஸ்டேடியத்தில் ஒலித்தது தமிழகமே எதிர்பார்த்த குரல்!!
சென்னை நேரு உள் விளையாட்டரங்கில், தமிழக முதல்வராக, இன்று காலை, 10:00 மணிக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பதவி ஏற்றார்.
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் நடிகர் விஜய் இன்று காலை 10 மணிக்கு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்றார். ராஜாஜி முதல் மு.க.ஸ்டாலின் வரை தமிழகத்தில் இதுவரை 12 முதலமைச்சர்கள் பதவி வகித்துள்ள நிலையில், நபர்கள் அடிப்படையில் 13ஆவது முதலமைச்சராக விஜய் இன்று வரலாற்றில் இடம் பெற்றார்.
காலை நீலாங்கரை இல்லத்தில் இருந்து கருப்பு பேன்ட், வெள்ளை சட்டை மற்றும் கோட்சூட் அணிந்தபடி விஜய் புறப்பட்டார். பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் அவர் காரில் நேரு உள்விளையாட்டு அரங்கத்தை நோக்கி சென்றார். வழிநெடுகிலும் திரண்ட தொண்டர்கள் விஜய்க்கு உற்சாக வாழ்த்துகள் தெரிவித்தனர். காரில் இருந்தபடியே விஜய் அவர்களுக்கு கை அசைத்து நன்றி தெரிவித்தார். அரங்கத்திற்கு வந்ததும் அவருக்கு பூங்கொத்து கொடுத்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
விழாவில் பதவிப் பிரமாணம் செய்து வைக்க வருகை தந்த தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை விஜய் மலர்கூடை கொடுத்து வரவேற்றார். பின்னர் பொன்னாடை போர்த்தி மரியாதை செய்தார். விஜய் மேடைக்கு ஏறியதும் தவெக தொண்டர்களின் “டிவிகே டிவிகே” கோஷங்கள் அரங்கத்தை அதிரச் செய்தன.
இதையும் படிங்க: கவர்னர் அர்லேகருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்ற விஜய்!! பொன்னாடை போர்த்தி மரியாதை!!
விழாவின் தொடக்கத்தில் வங்கக் கவிஞர் பங்கிம் சந்திர சட்டர்ஜி எழுதிய ‘வந்தே மாதரம்’ பாடல் ஒலித்தது. அதைத் தொடர்ந்து தேசிய கீதமான ‘ஜன கண மன’ மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்து ‘நீராரும் கடலுடுத்த’ பாடல்கள் பாடப்பட்டன. அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்தினர்.
மிகுந்த உற்சாகத்துக்கு மத்தியில் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், சி.ஜோசப் விஜய்க்கு முதலமைச்சர் பதவிப் பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். “விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்டு செயல்படுவேன்” என ஆண்டவன் மீது ஆணையிட்டு விஜய் உறுதிமொழி ஏற்றார். தொண்டர்களின் விசில் சப்தமும் கோஷமும் அரங்கத்தை நிரப்பியது.
https://twitter.com/i/status/2053337062733185172
இந்த பதவியேற்பு விழா தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய தருணமாக அமைந்துள்ளது. நடிகராக புகழ் பெற்ற விஜய், அரசியலில் நுழைந்து விரைவில் மக்களின் அபிமானத்தைப் பெற்று முதலமைச்சர் பதவிக்கு உயர்ந்துள்ளார். புதிய அரசு தமிழ்நாட்டின் வளர்ச்சி, மக்கள் நலன் மற்றும் அனைத்துத் தரப்பினருக்கும் நல்லாட்சி வழங்கும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மக்கள் மத்தியில் பெரும் கொண்டாட்ட சூழல் நிலவுகிறது.
இதையும் படிங்க: தமிழகத்தின் முதல் சிறுபான்மை முதல்வர்!! தவெக தலைவர் விஜய் உருவாக்கிய வரலாறு!! சிறப்பு தருணம்!!