×
 

விளையாட்டுத்துறைக்கு ரூ.718 கோடி ஒதுக்கீடு..! இடைக்கால பட்ஜெட்டில் சிறப்பு கவனம்..!!

இடைக்கால பட்ஜெட்டில் விளையாட்டு துறைக்கு 718 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழக அரசு விளையாட்டுத் துறையை மிகுந்த முக்கியத்துவத்துடன் கருதி வருகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே இளைஞர்களின் உடல் நலன், திறமை வளர்ச்சி, விளையாட்டு மேம்பாடு ஆகியவற்றுக்கு தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பது மட்டுமின்றி, கிராமப்புறம் முதல் நகர்ப்புறம் வரை அனைவருக்கும் விளையாட்டு வசதிகளை ஏற்படுத்துவது, பயிற்சி மையங்களை விரிவுபடுத்துவது, போட்டிகளை ஏற்பாடு செய்வது போன்ற பல்வேறு முயற்சிகள் மூலம் இத்துறையை வளர்த்து வருகிறது.

2026-27 நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தபோது, நிதியமைச்சர் தங்கம் தென்னரசு விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறைக்கு 718 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தார். இது தமிழக அரசின் விளையாட்டுத் துறை மீதான அக்கறையை மீண்டும் உறுதிப்படுத்தும் ஒரு முக்கியமான நடவடிக்கையாகும். 

பேரவையில் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறைக்கு 718 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுவதாக அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். ஐந்து ஆண்டுகளில் முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் மூலம் 101 கோடி ரூபாய் பரிசு தொகை வழங்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார். இந்த ஒதுக்கீடு மூலம் ஏற்கனவே நடைபெற்று வரும் திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படுவதோடு, புதிய வாய்ப்புகளும் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.48 ஆயிரம் கோடி ஒதுக்கீடு...! சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு..!

குறிப்பாக, முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளுக்கு 5 ஆண்டுகளுக்கு 101 கோடி ரூபாய் என்ற தொகை ஒதுக்கப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது. இது மாநில அளவிலான போட்டிகளை ஊக்குவிப்பதற்கும், இளம் வீரர்களை கண்டறிந்து அவர்களுக்கு தேசிய அளவு மற்றும் சர்வதேச அளவில் போட்டியிடும் வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் பெரிதும் உதவும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் முதல் இளைஞர்கள் வரை அனைவரும் இதில் பங்கேற்கும் வகையில் திட்டங்கள் விரிவாக்கப்படுவதால், விளையாட்டு கலாச்சாரம் மேலும் வலுப்பெறும்.

இதையும் படிங்க: இடைக்கால பட்ஜெட்டில் சர்ப்ரைஸ்...! மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு ரூ.4171 கோடி ஒதுக்கீடு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share