×
 

அரசு கேபிளை தனியாருக்கு தாரை வார்க்க திட்டமா? - தவெக அரசு செயலால் கேபிள் டி.வி. ஆப்ரேட்டரகள் அதிர்ச்சி..!

செட்-அப் பாக்ஸ் ரீசார்ஜ் நடைமுறையை சரி செய்ய நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் எச்சரிக்கை

அரசு கேபிள் டி.வி யை முடக்கி தனியாருக்கு தாரை வார்க்க மறைமுகமாக அரசு அதிகாரிகள் செயல்படுவதாக தமிழ்நாடு அரசு கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் பொது நல சங்க தலைவர் தாமோதரன் குற்றசாட்டு. இந்த தொழிலை நம்பி சேலத்தில் மட்டும் 5 ஆயிரம் தொழிலாளர்கள் உள்ளதாகவும், செட்-அப் பாக்ஸ் ரீசார்ஜ் நடைமுறையை சரி செய்ய நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் எச்சரிக்கை

அரசு கேபிள் டிவி சர்வர் பிரச்சனையை உடனடியாக சரி செய்ய வேண்டும் என வலியுறுத்தி
தமிழ்நாடு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொது நல சங்கம் சார்பில் மாவட்டத் தலைவர் தாமோதரன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் இன்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.   ஆட்சியரின் நேர்முக உதவியாளர் மற்றும் கேபிள் டி.வி  தாசில்தார் ஆகியோரை சந்தித்து புகார் மனு அளித்தனர். 

இதனை தொடர்ந்து தலைவர் தாமோதரன் செய்தியாளர்களை சந்தித்து கூறும் போது ,  சேலம் மாவட்டத்தில் 5 லட்சம் அரசு கேபிள் இணைப்பு உள்ளது . இதில் 1400 கேபிள் ஆபரேட்டர்கள் உள்ளனர் .  இந்த தொழிலை நம்பி 5 ஆயிரம் தொழிலாளர்கள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த சில  நாட்களாக அரசு கேபிள் டிவி சிக்னல் சர்வர் பிரச்சினை காரணமாக , ரீசார்ஜ்  செய்ய முடியவில்லை.  டி.வி யில் சரியான  சிக்னல் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. 
இதனால் அரசு  கேபிள் டிவி இணைப்பு பெற்ற பொதுமக்கள் தவிக்கின்றனர். ரீசார்ஜ் முடிந்தவர்கள் மீண்டும் ரீசார்ஜ் செய்ய முடியாத நிலையில் தவிக்கின்றனர்.
மேலும் புதிய இணைப்பு பெறக்கூடியவர்கள் செட்டாப் பாக்ஸினை  ஆக்டிவேஷன் செய்ய முடியாத நிலை உள்ளது. 

இதையும் படிங்க: “அந்த பேச்சுக்கே இடமில்லை...” - அமித் ஷா முன்பே ஸ்ட்ரிக்ட்டாக சொன்ன சி.எம்.விஜய்... கர்நாடாகாவுக்கு இடி...!

 அரசு கேபிள் நிறுவனம் , தனியார் சர்வர் நிறுவனத்திற்கு  முறையான  பணம் செலுத்தாததால் தான் , இந்த  சிக்னல் பிரச்சனை ஏற்படுகிறது.  இந்த சர்வப் பிரச்சினையினால் கடந்த சில ஆண்டாக 5 லட்சமாக இருந்த அரசு கேபிள்  இணைப்பு 2 லட்சமாக குறைந்துவிட்டது. இது போன்ற செயல்களை பார்க்கும் போது அரசு கேபிள் நிறுவனத்தை முடக்கி  தனியாருக்கு தாரை வார்க்க அரசு முற்படுகிறதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

 இந்த பிரச்சனையில் முதலமைச்சர் உடனடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும்.  இந்த பிரச்சனையில் உடனடியாக நடவடிக்கை எடுக்க விட்டால் அடுத்த கட்டமாக போராட்டம் நடத்துவது குறித்து முடிவு செய்யப்படும் என்று  கூறினார்.

இதையும் படிங்க: “திட்டமிட்டப்படி வரும் 24ம் தேதி போராட்டம்...” - எதிர்பாராத இடத்தில் இருந்து சி.எம். விஜய்க்கு வந்த வார்னிங்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share