×
 

திடீர் திடீரென மாறும் வேட்பாளர்கள்!! திக் திக் நிர்வாகிகள்! எந்த தேர்தல்லையும் இப்படி நடக்கல!!

இப்படி ஒவ்வொரு கட்சியும் வேட்பாளர் தேர்வில் பம்முவது பாய்வதற்கா இல்லை பதுங்கி ஓடுவதற்கா என்பது தேர்தல் முடிந்தால் தெரிந்துவிடும்.

இந்த தேர்தலில் வேட்பாளர் அறிவிப்பில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றங்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. பல கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்த பிறகு கடைசி நேரத்தில் மாற்றும் அல்லது விலகும் சம்பவங்கள் அடுத்தடுத்து நடந்து வருகின்றன.

ராணிப்பேட்டை தொகுதியில் தி.மு.க. சார்பில் முதலில் அமைச்சர் காந்தியின் மகன் வினோத் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். ஆனால் இன்று திடீரென வினோத் தனது சீட்டை தந்தை காந்திக்கு விட்டுக்கொடுப்பதாக அறிவித்தார். தந்தை போட்டியிட விருப்பம் தெரிவித்ததால் தானே விலகுவதாக அவர் கூறினார். கட்சி தலைமை அறிவித்த ஒரு வேட்பாளர், வேட்புமனு தாக்கல் செய்யும் கடைசி நாளில் இப்படி மாற்றம் செய்தது கட்சியினரிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஓசூர் தொகுதியில் தவெக தரப்பில் இன்னும் பெரிய குழப்பம் நிலவுகிறது. முதலில் மஞ்சுநாத் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அவர் விலகியதும் அம்பரீஷ் அறிவிக்கப்பட்டார். ஆனால் கடைசி நேரத்தில் தவெகவின் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலர் வடிவேல் (வேந்தர்க்கரசன்) தானே வேட்பாளர் என்று கூறி வேட்புமனு தாக்கல் செய்தார். ஒரே வாரத்தில் ஒரே தொகுதியில் மூன்று முறை வேட்பாளர் மாற்றம் நடந்துள்ளது.

இதையும் படிங்க: தொகுதியும் கிடைக்கல! கொடுத்த தொகையும் கிடைக்கல!! விரக்தியில் புலம்பும் கமல் கட்சி நிர்வாகிகள்!

காங்கிரஸ் தரப்பிலும் குழப்பம் நீடிக்கிறது. 28 தொகுதிகளில் 27க்கு மட்டுமே முதல்கட்ட வேட்பாளர்களை அறிவித்த காங்கிரஸ், மேலூர் தொகுதிக்கு முன்னாள் எம்.பி. விஸ்வநாதனுக்கு வாய்ப்பு அளித்தது. ஆனால் அவரை சந்தித்தபோது கட்சி நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரியில் தி.மு.க. - காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு இழுபறியாக இருந்ததால், இரு கட்சிகளும் 30 தொகுதிகளிலும் வேட்புமனு தாக்கல் செய்தன. வி.சி.க.வும் தனது பங்குக்கு 4 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்தது. பின்னர் உடன்பாடு ஏற்பட்டபோது, திருமாவளவன் தனது கட்சி வேட்பாளர்களுக்கு ஓட்டு சேகரிக்க மாட்டோம், கூட்டணிக்கே ஓட்டு போடுங்கள் என்று அறிவித்தார். இது அவரது சொந்தக் கட்சியினரிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

காட்டுமன்னார்கோவில் தொகுதியில் தானே போட்டியிடுவதாக அறிவித்த திருமாவளவன், சில நாட்களில் முடிவை மாற்றி, இளையபெருமாளின் மகன் ஜோதிமணியை வேட்பாளராக அறிவித்தார். இப்படி திடீர் திடீரென நிலைப்பாட்டை மாற்றும் அவரது செயல் ‘யுத்தக்களத்தில் பின்வாங்குவதும் ராஜதந்திரம்’ என்று அவர் சமாளித்தாலும், கட்சியினர் அதிருப்தியில் உள்ளனர்.

இந்தத் தேர்தலில் வேட்பாளர் தேர்வில் ஏற்பட்டுள்ள இந்தப் பம்மல்கள், பாய்வதற்கா அல்லது பதுங்கி ஓடுவதற்கா என்பது தேர்தல் முடிவுகளில் தெரியவரும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

இதையும் படிங்க: 3வது முறையாக மாற்றப்பட்ட வேட்பாளர்! முணுமுணுக்கும் நிர்வாகிகள்! ஓசூர் தவெகவில் நடந்த உள்ளடி வேலைகள்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share