×
 

#BREAKING விடிந்ததுமே திமுக தலையில் இறங்கியது பேரிடி... முன்னாள் அமைச்சர்கள் சேகர்பாபு, மா.சுப்பிரமணியன் மீது பாய்ந்தது வழக்கு...!

சென்னையில் போராட்டம் நடத்திய திமுகவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை எழும்பூரில் போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

அமைச்சர் சரத்குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரி, திமுகவினர் நேற்று எழும்பூரில் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற மா. சுப்பிரமணியன் உள்ளிட்ட 233 பேர் மீது போலீசார் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், புரசைவாக்கத்தில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற பிரியா மற்றும் சேகர் பாபு உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் மீதும் போலீசார் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

பொதுவெளியில் போதைப்பொருள் பயன்படுத்திய மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் சரத்குமாரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி திமுக மாணவர் அணி சார்பில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. தமிழகத்தின் மாவட்ட தலைநகரங்கள் உட்பட பல்வேறு இடங்களிலும் திமுகவினர் கூடி தவெக அரசுக்கும், அமைச்சர் சரத்குமாருக்கும் எதிராக முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்நிலையில், போராட்டத்திற்கு அனுமதி பெறவில்லை எனக்கூறி திமுகவினரை காவல்துறையினர் குண்டுகட்டாய் தூக்கி வலுக்கட்டயமாக வேனில் ஏற்றி கைது செய்தனர். சென்னை புரசைவாக்கத்தில் நடைபெற்ற போராட்டத்தில் திமுக முன்னாள் அமைச்சர் சேகர் பாபு, மேயர் பிரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  போராட்டத்தின் போது சாலையில் அமர்ந்து கோஷங்களை எழுப்பிய முன்னாள் அமைச்சர் சேகர்பாபு, கையில் வைத்திருந்த பதாகை சோசியல் மீடியாவில் கவனம் ஈர்த்து வருகிறது. அமைச்சரே மாத்திரை தயார்! போன் அண்ட் ஏடிம் கார்டு தயார் ‘பொடி’யாக்க நீங்கள் தயாரா? என்ற கேள்வியுடன் மாத்திரை, செல்போன், ஏடிஎம் கார்டு ஆகியவற்றின் கேலி சித்திரம் உள்ள பதாகையை சேகர் பாபு கையில் பிடித்தப்படி போராட்டத்தில் ஈடுபட்டார். 

அதேபோல் சென்னை எழும்பூரில் முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கானோர் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டனர். தற்போது அவர்கள் மீது காவல்துறை சார்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக திமுக முன்னாள் அமைச்சர்கள் சேகர்பாபு, மா.சுப்பிரமணியன் மற்றும் மேயர் பிரியா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எழும்பூரில் முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியனுடன் போராட்டம் நடத்திய 233 பேர் மீதும், புரசைவாக்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா உட்பட 200 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஆளுங்கட்சியின் ஆள் பிடிக்கும் அரசியல் Extreme! Sofa Model அரசின் இந்த Washing Machine மாடல்! உதயநிதி விளாசல்!

இதையும் படிங்க: ஆட்டம் போடுபவர்களின் அகங்காரம் அடங்கும்! திமுகவினர் கைது! கோவத்தில் கொந்தளித்த மு.க.ஸ்டாலின்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share