#BREAKING விடிந்ததுமே அதிர்ந்த அறிவாலயம்... செந்தில் பாலாஜி சகோதரர் மீது வழக்குப்பதிவு... குதிரை பேர விவகாரத்தில் அதிரடி...!
தவெக எம்.எல்.ஏ.களிடம் குதிரை பேரம் நடத்தியதாக எழுந்த புகாரிகள் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரர் அசோக் குமார் மீது வழக்குப்பதிவு
தமிழக அரசியலில் மீண்டும் குதிரை பேரம் சர்ச்சை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த ஊத்தங்கரை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இளையராஜாவிடம், சபாநாயகருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வர ஆதரவு அளிக்க ரூ.35 கோடி வரை பேரம் பேசப்பட்டதாக புகார் எழுந்தது. இதுமட்டுமல்லாமல் மேலும் சில எம்.எல்.ஏ.க்களிடமும் பேரம் பேசப்பட்டதாகவும் அவர்கள் அட்வான்ஸ் பெறக் கூட தயாராக இருந்ததாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி அரசியல் களத்தையே அதிரவிட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி தவெக எம்.எல்.ஏ. இளையராஜா கடந்த ஜூன் 29-ஆம் தேதி சென்னை காவல் ஆணையரிடம் அளித்த புகாரில், சில நாட்களுக்கு முன்பு இந்தியன் பொலிடிகல் டெமாக்ரடிக் ஸ்ட்ராடஜீஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வரும், திருநாவுக்கரசு என்பவர் தன்னை தொடர்புகொண்டதாக கூறியிருந்தார்.
முக்கிய அரசியல் கட்சியின் சார்பில் சந்திக்க வேண்டும் என்றும் கூறியதாக புகாரில் தெரிவித்துள்ளார். முதலில் அதை நிராகரித்ததாக கூறிய இளையராஜா, பின்னர் மீண்டும் தொடர்புகொண்ட அந்த நபர்கள், சட்டப்பேரவையில் சபாநாயகருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வர திட்டமிட்டிருப்பதாகவும், அதற்கு ஒத்துழைத்தால் ரூ.35 கோடி வரை வழங்கத் தயாராக இருப்பதாகவும் கூறியதாக புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: மக்களின் நம்பிக்கையாக முதல்வர் விஜய்... த.வெ.க-வில் இணைவதை அதிகாரப்பூர்வமாக அறிவித்த சி.விஜயபாஸ்கர்!
மேலும், "இந்த விவகாரத்தில் எனக்கு விருப்பமில்லை. இனிமேல் என்னை தொடர்பு கொள்ள வேண்டாம்" என்று கூறியபோது, இதை வெளியே சொன்னால் தனக்கும் குடும்பத்தினருக்கும் பாதிப்பு ஏற்படும் என்று மிரட்டியதாகவும் அவர் புகாரில் தெரிவித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
அதன் தொடர்ச்சியாக, சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு, திருச்சியைச் சேர்ந்த நரேஷ் மற்றும் சென்னை மேடவாக்கத்தைச் சேர்ந்த தியாகராஜன் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட மூவரும் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி, அவர்களை ஜூலை 15-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக நடந்த விசாரணையில், கைது செய்யப்பட்ட நரேஷ், திமுக முன்னாள் அமைச்சரும் தற்போது கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாரை சென்னையில் சந்தித்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து இந்த குதிரை பேர விவகாரத்தில் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோருக்கு தொடர்பு இருக்கிறதா? என போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது தான் திருநாவுக்கரசர் இவர்கள் இருவரது பெயரை பயன்படுத்தியே தெரியவந்தது.
இந்த விவகாரத்தில் தற்போது கொலை மிரட்டல், குற்றச்சதிக்கு உடந்தையாக இருந்தல், ஊழல் தடுப்புச்சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் செந்தில் பாலாஜி சகோதரர் அசோக் குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் அவசர கடிதம்: வி.பி. ஜிராம்ஜி திட்டத்தில் 100% நிதி கோரி வலியுறுத்தல்!