#BREAKING ராங்கா போன ராம்ப் வாங்க்... தவெக தலைவர் விஜய் மீது வழக்குப்பதிவு...!
இன்று குன்னம் காவல் நிலையத்தில விஜய் மற்றும் அவரது பவுன்சர்கள் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுக்காவிற்கு உட்பட்ட பெரியம்மா பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சந்தோசம் என்பவரது மகன் சரத்குமார், இவர் மதுரையில் நடைபெற்ற நடிகர் விஜயின் த வெக இரண்டாவது மாநில மாநாட்டில் பங்கேற்க சென்றிருந்த போது அவரை பவுன்சர்கள் தூக்கி வீசியதாக கூறி அவரது தாயார் தனியார் செய்தி தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி கொடுத்து அது ஒளிபரப்பாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் அது உண்மையல்ல என்றும், அந்த நிகழ்வில் பவுன்சர்களால் தூக்கி வீசப்பட்டது தான் தான் எனவும் அந்த பேட்டியில் உள்ளது தனது தாய் அல்ல எனவும் கூறி விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆஜித் என்ற தவெக தொண்டர் ஒருவர் பேசிய வீடியோ வலை தளங்களில் வெளியானது. இதைத் தொடர்ந்து பெரம்பலூர் மாவட்ட தவெக நிர்வாகிகள் சரக்குமார் தனது தாயாரின் பேட்டி பொய் என்று கூறுவது போன்ற ஒரு வீடியோவை வெளியிட்டு அந்த வீடியோவும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானதால் குழப்பம் நிலவிவந்தது.
இந்நிலையில் மதுரை தவெக மாநாட்டில் பவுன்சரால் தூக்கி வீசப்பட்டது தான்தான் என்றும், மாநாட்டில் பவுன்சர்கள் கீழே தள்ளிவிடும் ஆதாரம் தனது செல்போனில் உள்ளது எனவும் கூறி, நேற்று சரத்குமார் பெரம்பலூர் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் கொடுத்தார். சம்பந்த பட்ட பவுன்சர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட சரத்குமார் தனது தாயாருடன் புகார் அளித்திருந்தார்.
இதையும் படிங்க: தேதி குறிச்சாச்சு... திமுகவுக்கு மிகப்பெரிய ஷாக் கொடுக்கப்போகும் விஜய்... அதிரும் அறிவாலயம்...!
இதன் அடிப்படையில் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் காவல் நிலையத்தில் தவெக தலைவர் விஜய் மற்றும் பெயர் தெரியாத பவுன்சர்கள் 10 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் BNS - 296(B) திட்டுவது, 115 ( 2 ) தாக்குவது, 182(2) வேகமாக தள்ளி விடுவது ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க: தொண்டர்களை தூக்கி வீசிய விஜய் பவுன்சர்கள்... நடவடிக்கை எடுக்க காவல் நிலையத்தில் புகார்..!