பரபரக்கும் கொங்குமண்டலம்.. இபிஎஸுக்கு புது சிக்கல்... அதிமுகவினர் மீது அடுத்தடுத்து பாய்ந்தது வழக்கு...!
அனுமதியின்றி பிளக்ஸ் பேனர் வைத்ததாக மாநகர் மற்றும் புறநகர் காவல் நிலையங்களில் அதிமுக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
கோவையில் பிரச்சார சுற்றுப்பயணம் வந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை வரவேற்க அனுமதியின்றி பிளக்ஸ் பேனர் வைத்ததாக மாநகர் மற்றும் புறநகர் காவல் நிலையங்களில் அதிமுக நிர்வாகிகள் மீது செய்தனர்.
மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் பிரச்சார பயணம் மேற்கொண்டு வரும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, தற்போது கொங்கு மண்டலத்தில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணத்தை தொடங்கியதில் இருந்தே, சட்டத்திற்கு புறம்பாகவும், நீதிமன்ற உத்தரவுகளை காற்றில் பறக்கவிடும் படியும் பிளக்ஸ் பேனர்கள் வைப்பது தொடர்கதையாகி வருகிறது. இதுகுறித்து பொதுமக்கள் அளித்த புகார்களின் பேரில் பல்வேறு மாவட்டங்களில் அதிமுகவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை கோவை தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு தொகுதிகளிலும், அதனைத் தொடர்ந்து பொள்ளாச்சி, வால்பாறை சட்டமன்ற தொகுதிகளிலும் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது எடப்பாடி பழனிச்சாமியை வரவேற்க அக்கட்சித் தொண்டர்கள் எந்த அனுமதியும் இன்றி பிரதான சாலைகள், மற்றும் பொது இடங்களில் பிளக்ஸ் பேனர் வைத்தனர்.
இதையும் படிங்க: உதயநிதி பேசியது உண்மைதான்! எந்த தப்பும் இல்ல... டிடிவி தினகரன் பரபரப்பு பிரஸ்மீட்
எந்த அனுமதியும் பெறாமல் பொதுமக்களுக்கு இடையூறாக பிளக்ஸ் பேனர் வைத்ததாக அந்தந்த பகுதி அதிமுக நிர்வாகிகளின் மீது தொண்டாமுத்தூர், பேரூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, ஆனைமலை மற்றும் மாநகர் பகுதியில் குனியமுத்தூர், சுந்தராபுரம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் தலா ஐந்து வழக்குகள் பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: Election முடிஞ்சதும் தெரியும் யார் ICU-ல இருக்காங்க-னு..! உதயநிதிக்கு நயினார் பதிலடி..!