×
 

சாதியப் பெயர்கள் நீக்கம்... தமிழ்நாடு அரசு நடவடிக்கைக்கு திருமா உற்சாகம் வரவேற்பு...!

சாரி பெயர்கள் நீக்கம் தொடர்பான அரசாணையை வரவேற்பதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு, தனது சமூக நீதி அரசியலின் முன்னோடியாக இருந்தாலும், சாதி அடையாளங்கள் இன்னும் சமூகத்தின் நிழலாகத் திகழ்கின்றன. இத்தகைய சூழலில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, சாதி சார்ந்த பெயர்களைத் தெருக்கள், சாலைகள், நீர்நிலைகள் என்பவற்றிலிருந்து நீக்குவதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இது வெறும் பெயர் மாற்றமல்ல.

சமூகத்தில் சாதியின் பிணைப்புகளை அறுத்து, சமத்துவத்தின் அடித்தளத்தை வலுப்படுத்தும் ஒரு முக்கியமான படி. ஏப்ரல் 29 அன்று சட்டமன்றத்தில் அறிவித்த இந்த உத்தரவு, தமிழகத்தின் சமூக மாற்றப் போராட்டத்தின் தொடர்ச்சி. இந்த சாதிப்பெயர் நீக்கும் நடைமுறை வரவேற்பு பெற்றாலும் பல சிக்கல்களை எதிர்கொள்ள தான் செய்கிறது. 

இதனிடையே சாதிப் பெயர்களை நீக்கும் வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. தெருக்களில் உள்ள சாதிப் பெயர்களை நீக்குவது தொடர்பான அரசாணையை வரவேற்கிறோம் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இந்த அரசாணையை வெளியிட்டதற்காக, அரசாணை வெளியிட்டு நடவடிக்கை மேற்கொள்வதற்காக, நன்றி தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.

இதையும் படிங்க: இன்னும் CASE கூட போடல... திருமாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர்கள் போராட்டம்...!

பட்டதாரி ஆசிரியர்களை பணி நியமனம் செய்ய வேண்டும் என்றும் நீண்ட நாட்களாக போராடிக் கொண்டிருக்கிறார்கள் எனவும் கேட்டுக் கொண்டார். தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை பணி நியமனம் செய்வது தொடர்பாக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்றோம் என்றும் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து பணி நியமனம் செய்யப்படாமல் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்படாமல் உள்ளதாக கூறினார். ஆசிரியர்கள் பணி நிரந்தரம் தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளதாகவும் குறிப்பிட்டார். மேலும், வடசென்னை வளர்ச்சி பணிகள் குறித்து கருத்தில் கொண்டுள்ளதாக முதல்வர் தெரிவித்ததாக கூறினார். 

இதையும் படிங்க: சரிதான்... திருமாவுக்கு உடனடியா பாதுகாப்பு கொடுங்க... M.P. கமல்ஹாசன் தமிழக அரசுக்கு வலியுறுத்தல்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share