#BREAKING புழல் சிறையில் அன்பில் மகேஷ்... உள்ளே இறங்கும் மத்திய குற்றப்பிரிவு போலீஸ்.. மொத்தமாக `முடக்க' திட்டம்...!
அன்பில் மகேஷை காவலில் எடுத்து விசாரிக்க மத்திய குற்றப்பிரிவு போலீசார் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தனியார் பள்ளிகளிடம் சுமார் ரூ.100 கோடி அளவுக்கு மோசடி செய்யப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட அவரிடம் நேற்று தீவிர விசாரணை நடத்தப்பட்டு, பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, வரும் 6ஆம் தேதி வரை அவரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதன் அடிப்படையில், இன்று அதிகாலை அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில், அடுத்தகட்டமாக இந்த வழக்கைத் தீவிரமாக விசாரிக்க மத்திய குற்றப்பிரிவு போலீசார் திட்டமிட்டுள்ளனர். குறிப்பாக, இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அன்பில் மகேஷ் பொய்யாமொழியைப் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக இன்னும் சில நாட்களில் மனு தாக்கல் செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஒரு பைலை ஓபன் பண்ணதுக்கே இப்படியா?... திமுகவுக்கு மிகப்பெரிய ட்விஸ்ட் கொடுத்த நிர்மல் குமார்...!
இந்த வழக்கு தொடர்பாக நேற்று நீதிமன்றத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் பல்வேறு தகவல்களைத் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கில் சுமார் ரூ.400 கோடி அளவுக்குப் பணப் பரிவர்த்தனை நடைபெற்றிருப்பது தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து விரிவாக விசாரிப்பதற்காக அன்பில் மகேஷை காவலில் எடுக்க முடிவு செய்துள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அன்பில் மகேஷின் வங்கிப் பணப் பரிவர்த்தனைகளைக் கண்டறிவதற்காக, அவருடைய வங்கிக் கணக்குகளை முடக்குவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் முக்கிய நபராகக் கருதப்படும் முத்துக்குமார் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருகிறார். அவரைப் பிடிப்பதற்காகப் பல தனிப்படைகள் அமைக்கப்பட்டு, மத்திய குற்றப்பிரிவு போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கெனவே அவருக்கு லுக் அவுட் நோட்டீஸும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவர் எங்கு இருக்கிறார் என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
முத்துக்குமார் குறித்த தகவல்கள் அன்பில் மகேஷுக்குத் தெரியுமா என்பது பற்றியும் அவரிடம் விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் தொடர்ந்து அடுத்தடுத்து பல்வேறு திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. இது மிகப்பெரிய வழக்கு என்பதாலும், ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதாலும், விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அன்பில் மகேஷிடம் விசாரணை நடத்திய பின்னரே, இந்த வழக்கின் அடுத்தகட்ட விவரங்கள் தெரியவரும் என்று மத்திய குற்றப்பிரிவு போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: யாரை காப்பாற்ற முயற்சிக்கிறார் அன்பில் மகேஷ்... கைது, ஜாமீன் மறுக்கப்பட்டதற்கு பின்னால் இருக்கும் உண்மை இதுதான்...!