×
 

தமிழகத்துக்கு ரூ.2,176.84 கோடி! புதுச்சேரிக்கு ரூ.12.88 கோடி! 'விக்சித் பாரத் ஜி ராம் ஜி' திட்டத்தில் மத்திய அரசு ஒதுக்கீடு!

நிதிப் பங்கீட்டில் மத்திய அரசு 60 சதவீதமும், மாநில அரசுகள் 40 சதவீதமும் பங்கு வழங்க வேண்டும்.

புது டெல்லி: கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் ‘விக்சித் பாரத் ஜி ராம் ஜி’ திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முதல் தவணையாக 25,863 கோடி ரூபாயை அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு விடுவித்துள்ளது. இதில் தமிழகத்துக்கு 2,176.84 கோடி ரூபாயும், புதுச்சேரிக்கு 12.88 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2006-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்துக்கு (MNREGA) மாற்றாக கடந்த ஆண்டு மத்திய அரசு இந்தப் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

இத்திட்டத்தின்படி கிராமப்புறங்களில் 100 நாட்கள் வேலைக்கு பதிலாக 125 நாட்கள் வேலைவாய்ப்பு உத்தரவாதம் அளிக்கப்படுகிறது. தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச தினசரி ஊதியம் 300 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நிதிப் பங்கீட்டில் மத்திய அரசு 60 சதவீதமும், மாநில அரசுகள் 40 சதவீதமும் பங்கு வழங்க வேண்டும்.

இதையும் படிங்க: 7.7% பொருளாதார வளர்ச்சி!! 140 கோடி இந்தியர்களின் லட்சியம் வலுவாகிறது! ராஜ்நாத் சிங் பெருமிதம்!

இத்திட்டத்துக்கான சட்டத் திருத்த மசோதா கடந்த ஆண்டு டிசம்பரில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதி ஒப்புதலும் பெறப்பட்டது. இந்நிலையில் ஜூலை 1 முதல் நாடு முழுவதும் இத்திட்டம் அமலுக்கு வந்துள்ளது.

மத்திய வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் அனைத்து மாநில ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர்களுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தியபோது இந்த முதல் தவணை நிதியை விடுவித்தார்.

ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அமைச்சர், “இத்திட்டம் எந்தத் தடங்கலும் இன்றி ஒரே நாளில் அமலுக்கு வந்துள்ளது. தினசரி ஊதியம் 10 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. ஊதியங்கள் சரியான நேரத்தில் வழங்க மத்திய-மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும்” என்றார்.

ஆந்திரா, கேரளா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்கள் சிறப்பாக செயல்படுவதாகப் பாராட்டிய அவர், சில மாநிலங்கள் விரைந்து செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இத்திட்டம் கிராமப்புற இளைஞர்கள் மற்றும் தொழிலாளர்களின் வருமானத்தை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் தங்களுக்குக் கிடைத்த நிதியை சரியாகப் பயன்படுத்தி திட்டத்தை திறம்பட செயல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான முதல் காலாண்டுக்கு இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அமித் ஷாவுக்கு துணை பிரதமர் பதவி..? மத்திய அமைச்சரவையில் வரும் அதிரடி மாற்றம்.!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share