×
 

ஹப்பாடா! நிம்மதி பெருமூச்சு விடும் சந்திரபாபு நாயுடு!! ரூ.300 கோடி நிதி மோசடி வழக்கில் இருந்து விடுவிப்பு!!

ஆந்திராவில் திறன் மேம்பாட்டு கழக நிதியில், 300 கோடி ரூபாய் மோசடி செய்ததாக முதல்வர் சந்திரபாபு நாயுடு மீது தொடரப்பட்ட வழக்கில் அவரை குற்றமற்றவர் என தீர்ப்பளித்த சிறப்பு நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

ஆந்திராவில் திறன் மேம்பாட்டு கழக நிதியில் 300 கோடி ரூபாய் மோசடி செய்ததாக முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு மீது தொடரப்பட்ட வழக்கில், அவருக்கு எந்த தொடர்பும் இல்லை என்று சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதனால் வழக்கு முழுமையாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், தற்போதைய ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு, 2015-ல் முதல்வராக இருந்தபோது, ஆந்திர திறன் மேம்பாட்டு கழகத்தின் நிதியை தவறாக பயன்படுத்தி மாநில அரசுக்கு 300 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த சி.ஐ.டி. போலீசார், 2023 செப்டம்பர் 9-ஆம் தேதி ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சி காலத்தில் சந்திரபாபு நாயுடுவை கைது செய்தனர். சி.ஐ.டி. தலைவர் சஞ்சய் அப்போது, போலி ரசீதுகள் மூலம் போலி நிறுவனங்களுக்கு நிதி பகிர்ந்ததாக குற்றம்சாட்டினார். இதனால் ராஜமுந்திரி மத்திய சிறையில் 50 நாட்கள் அடைக்கப்பட்ட சந்திரபாபு நாயுடு, 2023 அக்டோபர் 31-ஆம் தேதி ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார்.

இதையும் படிங்க: 50 சதவீத மக்கள் அதிருப்தி!! அப்செட்டில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு!! அதிகாரிகள் மெத்தனம்!

விஜயவாடாவில் உள்ள சி.ஐ.டி. சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையின் இறுதியில், நிதியை தவறாக பயன்படுத்தியதில் சந்திரபாபு நாயுடுவுக்கு எந்த தொடர்பும் இல்லை என்று நீதிமன்றம் உறுதி செய்தது. இதனால் அவரை குற்றமற்றவர் என்று தீர்ப்பளித்து, முழு வழக்கையும் தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த தீர்ப்பு தெலுங்கு தேசம் கட்சி தொண்டர்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சந்திரபாபு நாயுடு மீதான இந்த வழக்கு அரசியல் பழிவாங்கல் என்று அக்கட்சி தொடர்ந்து குற்றம்சாட்டி வந்த நிலையில், நீதிமன்ற தீர்ப்பு அவர்களின் கருத்துக்கு வலுச் சேர்த்துள்ளது.

இதையும் படிங்க: அரசு துறைகளை கண்காணிக்க கார்ப்பரேட் நிபுணர்கள்! ஆந்திர முதல்வர் சந்திரபாபு பலே ஐடியா!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share