×
 

திருப்பதியில் உச்சக்கட்ட ஊழல்... ரூ.3000 கோடி அம்பேல்... ஏழுமலையான் சொத்தில் கைவைத்த சந்திரபாபு நாயுடு...!

திருப்பதி  ஏழுமலையான் பரக்காமணி மோசடியை விட மிகப்பெரிய மோசடி ரூ 3000 கோடி தேவஸ்தான நிலத்தை தனியார் ஓட்டலுக்கு ஒப்படைத்த சந்திரபாபு அரசு.இதில் பண மோசடி நடந்துள்ளது முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் கருணாகர் ரெட்டி குற்றச்சாட்டு 

ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது ஓபராய் ஓட்டலுக்கு அலிபிரி சாலையில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மிருககாட்சி அருகே மலை அடிவாரத்தில்  இருந்த சுற்றுலாத்துறைக்கு சொந்தமான 20 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது . இந்த இடத்தில் ஓபராய் ஓட்டல் மும்தாஜ் என்ற பெயரில் ஐந்து நட்சத்திர ஓட்டல் கட்ட அப்போது ஜெகன் மோகன் ரெட்டி அடிக்கல் நாட்டினார். இதனையடுத்து பணிகள் தொடங்கப்பட்டது. இந்நிலையில் இதற்கு அப்போது எதிர்கட்சியாக இருந்த தெலுங்கு தேசம், ஜனசேனா, பாஜகவினர் ஏழுமலையானின் செருபமாக இருக்கும் மலை அடிவாரத்தில் மும்தாஜ் எவ்வாறு கட்டப்படும் என எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்தநிலையில் கடந்த தேர்தலில்  ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில்  தேவஸ்தான அறங்காவலர் குழு மும்தாஜ் ஓட்டலுக்கு சுற்றுலாத்துறை சார்பில் ஒதுக்கிய நிலம் மலை அடிவாரத்தில் இருப்பதால் அந்த இடத்திற்கு பதில் அதன் எதிர்திசையில் இருந்த தேவஸ்தானத்திற்கு சொந்தமான இடம் தருவதாக கூறினர். இதற்காக ஆந்திர மாநில அமைச்சரவையும் ஒப்புதல் அளித்து அரசாணையும் வெளியிட்டது. இந்தநிலையில் சுற்றுலாத்துறை இடத்திற்கு பதில் வேறு இடத்தில் உள்ள சுற்றுலாத்துறை நிலத்தை ஓட்டல் கட்ட வழங்க வேண்டுமோ தவிர பக்தர்கள் காணிக்கையாக தேவஸ்தானத்திற்கு   வழங்கிய  நிலத்தை மும்தாஜ் ஓட்டலுக்கு எவ்வாறு வழங்குவீர்கள் என்று ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின்  முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் பூமனா கருணாகர் ரெட்டி நிருபர்களிடம் கூறுகையில்,  முதல்வர் சந்திரபாபு நாயுடு தேவஸ்தானத்திற்கு துரோகம் செய்துள்ளார். தேவஸ்தானத்தின்  நிலம்  ஓபராய் குழுமத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. 
இந்த நிலங்கள் மலை அடிவாரத்தில் உள்ள  அலிரிபிக்கு மிக அருகில் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்காக இந்த மாதம் 11 ஆம் தேதி அமைச்சரவைக் கூட்டத்திலும், இந்த மாதம் 13 ஆம் தேதி அரசாணையிலும் வெளியிட்டுள்ளனர். 

இதையும் படிங்க: ஏழுமலையானை தரிசிக்க திருப்பதி போறீங்களா? - இந்த தேதிகளை எல்லாம் மறக்காம நோட் பண்ணிக்கோங்க....!

சுற்றுலா நிலத்தின் சந்தை மதிப்பு ஏக்கருக்கு 90 லட்சம் என்றால் தேவஸ்தானத்தின் நிலம் ஒது ஏக்கருக்கர் ரூ 26 கோடி  மதிப்புள்ள 20 ஏக்கர் மதிப்புள்ள ரூ 420 கோடியாகும். இது திறந்த சந்தையில் இதன் மதிப்பு ரூ.3,000 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. கோஹினூர் வைரத்தை விட தேவஸ்தானத்தின் நிலம் விலை அதிகம். சுற்றுலாத்துறையிடமிருந்து தேவஸ்தானம் பெற்ற நிலத்தின் மதிப்பு ரூ.18 கோடி மட்டுமே. ஆனால் இதற்கு ரூ.460 கோடி மதிப்புள்ள தேவஸ்தானத்தின் நிலம் எப்படி கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. ஓபராய் ஹோட்டல் குத்தகை மூலம் பண மோசடி  செய்யப்பட்டுள்ளது.

இந்த முழு விவகாரத்தையும் செய்வதன் மூலம், பக்தர்கள் ஏழுமலையானுக்கு காணிக்கையாக  கொடுத்த நிலம் தனியார் நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. முதல்வர் சந்திரபாபு ஓபராய் குழுமத்திற்கு ரூ.3,000 கோடி மதிப்புள்ள நிலத்தை வழங்கியுள்ளார்.
13 ஆம் தேதி அரசாணை வழங்கப்பட்டது, ஆனால் இது வரை ஆன்லைனில் வரவில்லை. இந்த மாதம் 5 ஆம் தேதி பதிவு செய்யப்பட்டது, அதுவும் ஆன்லைனில் காட்டப்படவில்லை.
மிகவும் மதிப்புமிக்க செம்மரங்கள் அந்த பகுதியில் உள்ளன.

நானே சென்று அதை பார்த்தேன். 100 அறைகள் கொண்ட ஓபராய் ஹோட்டலில்
1500 பேருக்கு வேலை கிடைக்கும் என்று அரசாங்கம் மக்களிடம் சொல்கிறது. 100 அறைகளுக்கு 1500 லேருக்கு வேலைகள் எப்படி கிடைக்கும். 5 நட்சத்திர ஹோட்டலின் பெயரை மாற்றி ஆயிரக்கணக்கான கோடி மதிப்புள்ள சொத்தை சூறையாடினர். இது  பரக்காமணி மோசடியை   விட பெரிய கொள்ளை. தேவஸ்தானத்தின் நிலத்தை தனியார் ஹோட்டலுக்கு கொடுத்தது குற்றம். இதனால் தேவஸ்தானத்திற்கு என்ன லாபம் எந்தவித  வருமானமும் இல்லை. யாருக்கு நன்மை பயக்கும் வகையில், கட்டிடக் கட்டணத்தில் 2 கோடி சரிசெய்யப்பட்டு 26 கோடி முத்திரை வரி தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்த நிலங்கள் மறைந்த முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி கொண்டு வந்த ஏழு மலைகளுக்குள் உள்ளன. ஏழுமலையானுக்கே மூன்று நாமம் போட்டுள்ளனர். 
மாவட்ட ஆட்சியரும் தார்மீகப் பொறுப்பேற்க வேண்டும். அலிபிரியில் அனுமதியின்றி பணிகள் எவ்வாறு நடைபெறுகின்றன. அங்கிருந்த செம்மரக் கட்டைகள் என்ன ஆனது, இதற்கு பதிலளிக்க வேண்டும். இந்த நிலம் சுற்றுச்சூழல்  மண்டலத்தில் உள்ளது. ஏழுமலையானுக்கு சொந்தமான நிலம்    நிலம் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டுள்ளது. இதற்கு மடாதிபதிகள், இந்து அமைப்பினர்  எதிர்த்துப் போராட வேண்டும். இது குறித்து மௌனம் கலைந்து  போராட முன்வர வேண்டும்.  இந்த நிலம் ஒதுக்கீட்டின் மூலம் பெரிய அளவிலான ஊழல் மறைக்கப்பட்டுள்ளது. மாநில அரசு மிகப்பெரிய தவறுகளைச் செய்துள்ளது. இதற்கு துணை முதல்வர் பவன் கல்யாண் உடனடியாக பதிலளிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு ஹேப்பி நியூஸ்... இந்த மெஷினை ஸ்கேன் செய்தால் இலவசப் பணம் கிடைக்கும்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share