ஒரே நாளில் 7 விமானங்கள் ரத்து.. பயணிகள் கடும் அவதி.. சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு!
சென்னை விமான நிலையத்திலிருந்து அந்தமான், அகமதாபாத், மும்பை கவுகாத்தி, கொச்சி புவனேஸ்வர், இந்தோனேசியா நாட்டின் டென்பாசர் நகருக்கு செல்லும் சர்வதேச விமானம், மொத்தம் 7 விமானங்கள், போதிய பயணிகள் இல்லாமல் இன்று திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளன.
சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து இன்று ஒரே நாளில் 6 உள்நாட்டு விமானச் சேவைகளும், இந்தோனேசியாவின் டென்பாசர் நகருக்குச் செல்லும் ஒரு சர்வதேச விமானம் என மொத்தம் 7 விமானங்கள், போதிய பயணிகள் இல்லாத காரணத்தால், திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளன. எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் திடீரென விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால், விமான நிலையத்தில் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர். இந்த விமானங்கள், இன்று முன்னறிவிப்பு இல்லாமல், திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதால், பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.
சென்னை-அகமதாபாத் அதிகாலை 3.55 மணி இண்டிகோ ஏர்லைன்ஸ், சென்னை- அந்தமான் அதிகாலை 4.40 மணி இண்டிகோ ஏர்லைன்ஸ், சென்னை-மும்பை அதிகாலை 5:25 மணி இண்டிகோ ஏர்லைன்ஸ், சென்னை-கவுகாத்தி அதிகாலை 5.30 மணி இண்டிகோ ஏர்லைன்ஸ், சென்னை-புவனேஸ்வர் அதிகாலை 5:50 மணிஸ இண்டிகோ ஏர்லைன்ஸ், பயணிகள் விமானம், ஆகிய 5 புறப்பாடு விமானங்கள், இன்று பகல் 12.25 மணிக்கு, கொச்சியிலிருந்து, சென்னை வரவேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் வருகை விமானம், ஆகிய 6 உள்நாட்டு விமானங்கள், போதிய பயணிகள் இல்லாமல், இன்று திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: தியாகிகள் பெயர் விவகாரம்: அரசு பதிவுகள்படி திருத்தக் கோரி பொதுநல மனு.. நாளை விசாரணை!
அதேபோல் சென்னையிலிருந்து, இன்று அதிகாலை 4.35 மணிக்கு, இந்தோனேசியா நாட்டின் டென்பாசர் நகருக்கு செல்ல வேண்டிய, இண்டிகோ ஏர்லைன்ஸ் சர்வதேச விமானமும், இன்று போதிய பயணிகள் இல்லாமல், திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. இதைப் போல் சென்னை விமான நிலையத்தில், ஒரே நாளில் 6 புறப்பாடு விமானங்கள், ஒரு வருகை விமானம், மொத்தம் 7 விமானங்கள், திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதால், பயணிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
இதுகுறித்து விமான நிறுவத்தின் தரப்பில் கூறும் போது, இது எங்களுடைய நிர்வாகக் காரணங்களுக்காக ரத்து செய்யப்படுகிறது. பயணிகளுக்குத் தகவல் தெரிவித்து மாற்று ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன என்று கூறுகின்றனர்.
இதையும் படிங்க: சென்னையை கவரும் Wonderla..!! முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்த உலகத் தர பொழுதுபோக்கு பூங்கா!