×
 

ரூ.2000 கோடிப்பே... சென்னை மாநாகராட்சி தலையில் இறங்கியது பேரிடி... நாறி நாற்றமெடுக்கப் போகுது...!

மாநகரின் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் அத்தியாவசியப் பணிகள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

சென்னை மாநகராட்சி நிர்வாகம் கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் காரணமாக, மாநகரின் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் அத்தியாவசியப் பணிகள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

குறிப்பாக, சென்னை மாநகரப் பகுதிகளில் சாலை அமைத்தல், மேம்பாலங்கள் கட்டுதல், மழைநீர் வடிகால் அமைத்தல், பூங்கா மேம்பாடு, கால்வாய் பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு உட்கட்டமைப்புப் பணிகளை நிறைவேற்றிய ஒப்பந்ததாரர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை சுமார் 2,000 கோடி ரூபாயைத் தாண்டியுள்ளதாக கூறப்படுகிறது. நீண்ட காலமாக நிலுவைத் தொகை வழங்கப்படாததால், புதிய ஒப்பந்தப் பணிகளுக்கான டெண்டர்களில் பங்கேற்க பல ஒப்பந்ததாரர்கள் தயக்கம் காட்டி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால், சாலை பராமரிப்பு, மழைக்கால முன்னெச்சரிக்கைப் பணிகள், புதிய மழைநீர் வடிகால் அமைத்தல், சேதமடைந்த சாலைகளைச் சீரமைத்தல் உள்ளிட்ட பல முக்கியப் பணிகள் தாமதமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: டெண்டர் முறைகேடு...! சென்னை மாநகராட்சியில் 35 டெண்டர்கள் ரத்து..! தமிழக அரசு அதிரடி முடிவு..!!

இதற்கிடையில், சென்னை மாநகரில் திடக்கழிவு மேலாண்மை மற்றும் குப்பை அகற்றும் பணிகளை மேற்கொண்டு வரும் தனியார் நிறுவனமான உர்பேசர் சுமீட் நிறுவனத்திற்கும் மாநகராட்சி சுமார் 450 கோடி ரூபாய் நிலுவைத் தொகை வழங்க வேண்டியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலுவைத் தொகை விரைவில் வழங்கப்படாவிட்டால், குப்பை சேகரிப்பு மற்றும் அகற்றும் பணிகளில் பாதிப்பு ஏற்படக்கூடும் என்ற அச்சமும் எழுந்துள்ளது.

சென்னை போன்ற பெருநகரத்தில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான டன் திடக்கழிவுகள் சேகரிக்கப்படுகின்றன. குப்பை அகற்றும் பணிகளில் தாமதம் ஏற்பட்டால், குடியிருப்பு பகுதிகள், முக்கியச் சாலைகள் மற்றும் வணிக வளாகங்களைச் சுற்றியுள்ள இடங்களில் குப்பைகள் தேங்கும் நிலை உருவாகலாம். இதனால் துர்நாற்றம், சுகாதாரக் கேடு, கொசு உற்பத்தி அதிகரிப்பு மற்றும் தொற்றுநோய்கள் பரவும் அபாயமும் அதிகரிக்கும் என்று சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

மேலும், நிதி நெருக்கடி நீடித்தால், சாலைப் பராமரிப்பு, மழைநீர் வடிகால் சீரமைப்பு, தெருவிளக்கு பராமரிப்பு, பூங்கா பராமரிப்பு, கழிவு மேலாண்மை உள்ளிட்ட நகரின் அத்தியாவசிய சேவைகளும் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

எனினும், இந்த நிலுவைத் தொகைகள் எப்போது வழங்கப்படும், மாநகராட்சியின் நிதி நெருக்கடியை சமாளிக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்பது குறித்து மாநகராட்சி நிர்வாகம் தரப்பில் விரிவான அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: 3 மாதங்களுக்கு பிறகு நாளை கூடுகிறது சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share