விஜயகாந்திற்காக 2 கோரிக்கைகள்... தேமுதிக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்னென்ன?
தேமுதிக செயற்குழு - பொதுக்குழு வில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்னென்னவென பார்க்கலாம்.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த வெள்ளிச்சந்தை கே.வி. மகாலில் தேமுதிக தலைமை செயற்குழு, பொதுக்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்துகொண்டு கட்சியின் ஆக்கப்பணிகள் குறித்தும், கட்சிபணிகள், எதிர்கால அரசியலில் முக்கிய முடிவுகள், திட்டங்கள் குறித்தும் நிர்வாகிகளுடன் ஆலோசித்து வருகிறார்.
இந்த நிலையில், தேமுதிக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தேமுதிக தலைவர் விஜயகாந்த்-க்கு பாரத் ரத்னா விருது வழங்க வேண்டும். சென்னை 100 அடி சாலைக்கு கேப்டன் விஜயகாந்த் பெயரை சூட்ட வேண்டும். மணிமண்டபம் கட்ட வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வக்ஃபு சட்டத்தின் மூலம் இஸ்லாமிய சொத்துக்களுக்கு பாதிப்பு ஏற்படாது என்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். தேமுதிக நிர்வாகிகள் சார்பில் உலக கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் மறைவிற்கு இரங்கல். ஜம்மு காஷ்மீர் பஹால்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது கொடூர தாக்குதல் நடத்தியதில் 26பேர் உயிரிழந்துள்ளனர். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல், மத்திய அரசு பாதுகாபாபை பலப்படுத்த வேண்டும்.
இதையும் படிங்க: மனதளவில் பாதிக்கப்பட்டிருக்கேன்..! நான் கட்சி பதவியில் இருந்து விலக காரணம் இது தான்..! மனம் திறந்த துரை வைகோ..!
சாதி வெறி தூண்டுதலால் தமிழகத்தில் உள்ள மாணவர்கள் பழிவாங்கும் உணர்வும், போதைக்கு அடிமையாகும் நிலையை மாற்றி, இளைய தலைமைறையினரக்கு வரும் கல்வி ஆண்டில் "நல் ஒழுக்கம்" பாடப்பிரிவினை செயல்படுத்தி, பெற்றோர்கள், ஆசிரியர்கள், காவல் துறை மற்றும் தமிழக அரசு இணைந்து மாணவர்களை நல்வழிப்படுத்தி மாணவர்களின் எதிர்காலத்தை சீரமைக்க வேண்டும்.
தமிழகத்தில் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச் சம்பங்களை தடுக்க மதுபானக் கடையை குறைத்தும், கஞ்சா, மற்றும் கள்ளச்சாராயம் தலை முற்றிலும் ஒழிக்க வேண்டும். தமிழக மீன்வர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்பபடுவது, படகுகளை உடைப்பது, மீன்பிடி வலைகளை சேதப்படுத்துவது, கைது செய்யப்படுவதை தடுக்க, தமிழக அரசு கச்சத்தீவை மீட்டு, மீனவர் பிரச்சினையை தீர்க்க வேண்டும்.
கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட நெசவாளர்கள் மற்றும் விசைத்தறி தொழிலாளர்கள் வாழ்வாதாரத்திற்காக நூல் விலை உயர்வை கட்டுப்படுத்தி, ஜிஎஸ்டி வரியை குறைத்து, கூலியை உயர்த்தி வாழ்தாரத்தை உறுதி செய்ய வேண்டும்.
விருதுநகருக்கு பட்டாசு ஆலை வெடிவிபத்து, பல்வேறு மாவட்டங்களில் பட்டாசு வெடி விபத்தில் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க, உரிய ஆய்வு செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதையும் படிங்க: எதையுமே என்னால சொல்ல முடியாது..! பேச மறுக்கும் வைகோ.. உட்கட்சி பூசலால் குழப்பமா?